22 Apr 2018

உயிர் ஏங்கிய நிலம்,,,,


நீர் சுமந்த பாதைகள் யாவும்
கல்லாகவும் மண்ணாகவும் கட்டிடங்களாயும்./
மண் வெட்டப்போன இடத்தில் மண் இருக்கிறது,
கல் எடுக்கப்போன இடத்தில் கல் இருக்கிறது,
நிலம் காணப் போன இடத்தில் நிலம் இல்லை,
மாறாக சீமைக்கருவேலைகளும்
பெயர் தெரியாத எதேதோ கரடுகளுமாய்/
உடல் கிழித்த முட்களையும் காலை பதம் பார்த்த
கரடுகளையும்  தாண்டிப் போனால்
கிராமத்து விவசாயின் வாயில் நுழையாத
ஏதேதோ பெயர் காட்டிய பலகைகளே இருக்கின்றன.
தென் பகுதியை ஆலைக்கும் வடபகுதியை ஆய்வு க்கும்
இன்னும் இன்னுமான இடைப்பட்ட பகுதிகளை
திட்டங்களுக்குமாய் ஒதுக்கி கூறு போட்ட
நிலைத்தில் என் விவசாயின் ஆன்மாவும் குடும்பமும்,
அவர்களின் போராட்ட அடையாளங்களுமாய்
நிறைந்து காட்சிப்பட்டதாய்,,,
சதுரம் காட்டியும் வட்டம்காட்டியும்,செவ்வக வடிவிலும்
இன்னும் இன்னுமாய் நீள வெட்டுகளிலும்,
குறுக்கு வெட்டுகளிலுமாய் தன் விளைச்சல்
காட்டியும் பசுமை சுமந்துமாய்,,,,
நின்ற நிலங்கள் மூளியாயும் மலட்டுத்தன்மை காட்டியும்
கரடு தட்டியுமாய்,,/
என் தாத்தாவும் பாட்டனும் முப்பாட்டனும்
இன்னும் இன்னுமான முகம் அறியாத
என் முன்னோர்களுமாய் ஊனி வைத்த
விதைகள் காட்டிய விளைச்சலை அவசர அவசரமாய்
அள்ளிக்கொண்டு போய் அழுக வைக்கவும்
காயடித்து விடமாய் ஆயத்தம் காட்டுகிறார்கள்,
காட்டுகிற ஆயத்தங்கள் இன்று நிலங்களை
ஈரமற்று போகச்செய்யவும் விவசாயிகளை
நிலங்களிலிருந்து வேறறுத்துப் போடவுமாய்,,,
துடிப்பு காட்டி நிற்கின்றனவாய்,,,/
பசுமை காட்டி விளைந்த நிலங்கள் யாவும்
இன்று பசுமை என எழுத ஆள் தேடி காத்திருப்பதாய்,,,/

5 comments:

Tamilus said...

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

நன்றி..
தமிழ்US

iramuthusamy@gmail.com said...

சிறப்பான கவிதை

vimalanperali said...

நன்றி சார் கருத்துரைக்கு,,,/

vimalanperali said...

நன்றி சார் தகவலுக்கு,,/

vimalanperali said...

நன்றி சார் தகவலுக்கு,,/