25 Mar 2018

கையளவே,,,,,,,,,


கொஞ்சமாக அல்லது கையளவே கொடிக்கிடக்கிறது மண்.

கூட்டி வைத்து பிசைந்தால் ஒரு கொடியிடையாளை சிருஷ்டித்து விடலாம் என நன் நம்பிக்கையளித்த மண்,

வீட்டின் பக்கவாட்டு பக்க வாட்டு வெளியில் கொட்டப் பட்டுக்கிடக்கிடக்கிறது, வீட்டின் பக்கவாட்டு வெளியில்.

செப்டிக் டேங்க் மற்றும் கொஞ்சமாய் வளைத்து வளர்த்து கட்டப்படிருக்கிற மோட்டார் பெட் தவிர்த்த இடத்தைத்தவிர்த்து.

தவிர்த்த இடத்தை தவித்த இடமாக அடையாளப்படுத்திக்கொண்டிருந்த வெளியில் கொட்டப்பட்டிருந்த மண் விரும்பி கேட்டால் முகம் காட்டும் போலும்.

முகம் காட்டுகிற மண் கொஞ்சம் பேசினால் நன்றாக இருக்கும்தானே என்கிற எண்ணத்தை நிறைகொண்டு நிறைவேற்றி கொண்டிருக்கொண்டிருந்தது.

இதையெல்லாம் பார்க்கும் போது கொட்டப்பட்டிருந்த மண்ணும் வெளியும் பேசிக்கொள்வது போல் காட்சிப்படும் பல நேரங்களில்/

அப்படி பேசிக்கொள்கிற மண்ணிலிருந்து கூட்டிப்பிசைந்து செதுக்கி உரித்து உருவாக்குகிற உருவம் யாருடையதாய் இருந்து விடமுடியும்.உனது உருவ ம் தவிர்த்து,,,,,,,என மனைவியிடம் இவன் சொன்ன போது,,,,”சும்மாக் கெடங்க, ஏதாவது பேசிக்கிட்டு,வேற வேல கீல இல்லையா ஒங்களுக்கு” என அவள் வெகுவாய் நாணப்பட்ட நேரம் இரவு பத்து மணி சுமாராய் இருக்கலாம்.

சாப்பிட்டுக்கொண்டிருந்தான் இவன். எதிரில் அல்லது பக்கத்தில் எனக் கொள் ளலாம் உட்கார்ந்திருந்தாள்,நெருக்கம் காட்டி.

குழம்பு சோறு முடிந்திருந்தது.இன்னும் கொஞ்சம் சோறு போட்டு குழம்பு ஊற்றினாள்,

கத்தரிக்காய் குழம்பு நன்றாக இருந்தது.அவளது கை மணத்தில் எது சமைத் தாலும் நன்றாகவே இருக்கிறது சமீப நாட்களாய்,

“பஜாருக்குப்போய் கூடவாங்கல,இங்கதான் பக்கத்து கடைகள்ல வாங்குனேன். கொஞ்சம் சொத்தையும் சொள்ளையுமாகத்தான் இருந்துச்சி, கொஞ்சம் கை பாத்து பிரிச்சி வாங்கீட்டு வந்தேன் ஒரு கால் கிலோ வரைக்கும்,அது ஒங்களுக்கு நல்லதா போச்சா,,,,”,என்றாள்.

“பெறக்கிஎடுத்து வாங்கீட்டு வந்தா என்ன ,மொத்தமா வாங்கீட்டு வந்த என்ன, எதுநல்ல இருக்கோ ,அத வாங்கி சாப்புட்டுக்கிற வேண்டியதுதான்,தவிர வாங் குன கையும் அத சமைச்ச மனசும்தான முக்கியம் என இவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நேரெதிர் கோடு போட்டது போல் இல்லாமல் கொஞ் சம் கோட்டிலிருந்து விலகி அமர்ந்து குழம்பை ஊற்றிக்கொண்டிருந்தாள்,

“இந்த தெருவுலயே எடுத்துக்கிட்டீங்கன்னா நீங்க ஒரு ஆளுதான் ராத்திரிக்கு சோறு சாப்புடுற ஆளா இருப்பீங்கன்னு நெனைக்கிறேன்”.என்கிற அவளின் சொல்லுக்கு”இல்ல அப்பிடியெல்லாம் இல்ல ,இன்னமும் இந்த கலிகாலத்துல வளந்த நகரங்கள்ல கூட ஹோட்டல்ல நைட்டுக்கு சாப்பாட கேட்டு வாங்கி சாப்புடுறஆட்கள்இருக்காங்க,ஹோட்டல்காரங்ககளும்என்ன பண்றாங்கன்னா வாடிக்கையாளர விட்டுறக் கூடாதுங்குறத்துக்காக நைட்டுக்குன்னு தனியா சமைக்காட்டிக்கூட மதியம் சமைச்ச சோத்துலயிருந்து கொஞ்சம் எடுத்து வச்சிருப்பாங்க,

“எனக்குத்தெரிஞ்ச பேங்கு மேனேஜர் ஒருத்தரு மெட்ராஸ் பக்கத்துக்காரரு, இங்க நம்ம ஊர்ல தனியா ரூம் எடுத்து தங்கீருக்காரு,அவரு என்ன பண்ணு வாருன்னா வாடிக்கையா சாப்புடுற ஹோட்டல்ல நைட்டு சாப்பாட பார்சல் கட்டி வாங்கீட்டு போயிருவாரு.

“ரூமுலபோயி சுட வச்சிருக்குற பாலு இல்லைன்னா மோர ஊத்தி சாப்புட்டுக் கிட்டு படுத்துருவாரு. பெரும்பாலும் பால் ஊத்தித்தான் சாப்பு டுவாரு. தொட் டுக்கிற கடைக்காரன் ஏதாவது கூட்டுப்பொரியல் குடுத்து விட்டா உண்டு. இல்லைன்னா சேவு மிக்சர் பக்கோடான்னு ஏதாவது வாங்கி வச்சிக் கிருத வச்சி சாப்புடுவாரு,

”இதெல்லாம் ஒண்ணும் இல்லைன்னு வையேன்,பாப்பாரு ரூமுக்கு கீழ இருக்குர கடையில போயி ஒரு தேங்காய்ச்சில்லு,கொஞ்சம் பொரிகடலை, ரெண்டு பச்சை மெளகான்னு வாங்கீட்டு வந்து எல்லாத்தையும் ஒரு தட்டுல போட்டு கலந்து வச்சிக்கிட்டு ஒரு கவளம் சோறு உள்ள போனஒடனே தேங்காய் சில்லுல ஒரு கடி,கொஞ்சம் பொரிகடலை,பச்சை மெளகாய ஒரு கடின்னு கடிச்சி சாப்புட்டுக்கிருவாரு,என்ன சார் இதுன்னு கேட்டா வாய்க்கு ள்ள நாமா அரைச்சிக்கிற சட்னி” என்பார்,

”அது மட்டும் இல்லை அவரு சாப்புடுற மொறையே கொஞ்சம் வித்தியாசம இருக்கும்,சாப்பாட ஒரு பாத்துரத்துல போட்டு வச்சிக்கிட்டு கொஞ்சம் கொஞ்ச மாத்தான் தட்டுல எடுத்துப்போட்டு சாப்புடுவாரு,தயிர் எவ்வளவு கட்டியாய் இருந்தாலும் நல்லா தண்ணியா கலந்துதான் சாப்புடுவாரு,

”கொஞ்சம் ஊறுகாய் கொஞ்சம் தேங்காய்ச் சில்லு கொஞ்சம் சேவு இல்லை மிக்சர் கொஞ்சம் கொழம்பு சோறு,கொஞ்சம் மோர் சோறு,கொஞ்சம் பால் சோறு,,,என வித்தியாசப்படுத்தித்தான் சாப்பிடுவாரு,

”ஹோட்டல்ல போய் இத்தனை விதமாகவும்,இத்தனை சவரட்டனையாவும் சாப்பிட முடியுமான்னுவாரு,

”அவருரூமுலேயே எல்லாம் வச்சிருப்பாரு,கரண்டு ஸ்டவ்வு ,பால் பாக்கெ ட்டு, தயிரு,ஊறுகாய்,மொளகாப்பொடி,புலிக்கொழம்பு பேஸ்ட்டு,,,,,,,பழங்கள்ன் னு நெறைய வச்சிருப்பாரு,….இதுக்கு பேசாம சமையல் பண்ணீறலாமுல் லன்னு கேட்டா” “முன்னபின்ன தெரியாத வேலையில ரிஸ்க் எடுக்கக் கூடாது,அது நமக்கும் நம்ம சுத்தி இருக்குறவுங்களுக்கும் நல்லதில்லைன்னு வாரு,

“நானும் அவரு ரூமுக்கு போயிருக்குறேன்,சாப்புடுற நேரம் போனா எனக்கும் ஒரு கை சாப்பாடும்,ஒரு தேங்காய்ச்சில்லும் கண்டிப்பா உண்டு,

”வேண்டாமுன்னு சொன்னாலும் கேக்க மாட்டாரு,தெறந்து கெடக்குற ரூமுல அவர் வாட்டம் ஒரு ஓரமா ஒக்காந்து புஸ்தகம் படிச்சிக்கிட்டு இருப்பாரு,ஏன் சார் இப்பிடி,,,,,,?யாராவது நொழஞ்சிட்டா என்ன பண்ணுவீங்கன்னு கேட்டா அவரு சொல்லுவாரு,இங்க நொழஞ்சி என்ன பண்ணப்போறாங்க,அப்பிடியே நொழஞ்சாலும் ஏங் புலனுக்கு தப்பி நொழஞ்சிற முடியாது,இப்ப நீங்க வாசலு க்கு வெளியில ஒரு அஞ்சடி தூரத்துல வரும்போதே தெரிஞ்சி போகும்,

ஒங்கநடை,அடிஎடுத்துவேகம் செருப்ப இழுத்து இழுத்து நடக்குறதுன்னு,,,,, எல்லாம் தாண்டி ஒங்களோட வாசனைன்னு நெறைய இருக்குது, இதையெ ல்லாம் வச்சி இன்னார் வர்றாங்கன்னு ஓரளவுக்கு யூகிச்சிர முடியும்,தவிர அப்பிடியெல்லாம் இங்க நொழஞ்சி எடுத்துட்டுப்போறதுக்கு என்ன இருக்கு சொல்லுங்க,ஏங் வெரல்ல கெடக்குற மோதிரம் தவிர்த்து/இத எடுக்கவா வந்துறப் போறாங்க,அவுங்களுக்கு இதவிட பிஸியா எவ்வளவோ வேலை இருக்கும் போது,,,,ன்னு” சொல்லுவாரு/

தவிர்த்து ஆள் பொருள் அம்புன்னு சொல்றாங்கல்லையா,ஏங் தோற்றத்த வச்சும் ஏங் பழக்க வழக்கத்த வச்சும், இவன்கிட்ட பக்கத்துல கூட வர மாட் டாங்க.

தோற்றத்த வச்சும் நடவடிக்கைய வச்சும்தான ஒரு ஆள எடையே போடுறா ங்க,ஒருமனுசன் ஏழ்மையா அப்புராணியா குனிஞ்ச தலை நிமிராம திரியிறா ன்னா இவன் அப்புராணி, ரொம்ப பயந்தவன் ஒண்ணும் தெரியாவன்னு முத்தி ரை குத்திவச்சிர்றாங்க, கொஞ்சம் ஏழ்மையான சூழ்நிலையில வசிக்கிறவுங்க, இல்லாதவன்னு இருக்குறவுங்கள இலவசத்துக்கு ஏங்குறவன்,ஓட்டுக்கு காசு வாங்குறவன்,தண்ணியடிச்சிட்டு ரோட்டுல விழுந்து கெடக்குறவன், கோயில் திருவிழாவுல சத்தமா பாட்டு வச்சி கேட்டு கொண்டாட்டங்குற பேர்ல அடுத்தவங்க நிம்மதிய கெடுக்குறவன்னு நெறைய சொல்லி முத்திரை குத்தி வச்சிருக்காங்க, இதுக்குப் பின்னாடி அவுங்கள அப்பிடி இருக்க வச்சது யாருங் குற மிகப்பெரிய கேள்வியும் மென் அரசியலும் இருக்குல்ல,,,,அத நம்ம புரிஞ்சிக்கிறனுமின்னுசொல்லுவாரு,சாப்புட்டுக்கிட்டே,,,,,,எனஇவன்சொல்லும் போது நாலாவது தடவையாக கொஞ்சம் சோறு வாங்கியிருந்தான்.

“ஏங் இப்பிடி கொஞ்சம் கொஞ்சமா வாங்கி சாப்புடாட்டி மொத்தமா வாங்கிக் கிற வேண்டியதுதான,

“பத்தரை மணிக்கு சாப்புட ஒக்காந்தீங்க,மணி பதினொன்றை ஆகிப்போச்சி, இப்பிடியா ஒரு மணி நேரமா சாப்பாடு தட்டு முன்னாடி ஒக்காந்திருப்பீங்க, அதுலயும் இன்னும் சாப்புட்டு முடிச்ச பாடக்காணோம்,,,,என்கிற அவளின் பொய் கோபத்திற்கு இவனது பதில் சொல்லாய்,,,,இரு இப்ப என்ன ஒரேயடியா மொத்தமா சாப்புட்டு முடிச்சிட்டு எங்கபோகப் போறோம் சொல்லு/

”இப்ப நீ தட்டு முன்னாடி இல்லைன்னா நா வாட்டுக்கு கப்பு கப்புன்னு அள்ளி எறிஞ்சிட்டு போய்க்கிட்டே இருந்திருப்பேன்.அதான் நீ ஒக்காந்துருக்கயே அப்புறம் என்ன,ஒக்காரு ஒக்காரு,ஒனக்கு அவசரமா தூங்கப்போகணுமின்னு ஒண்ணும்இல்லயில்லை,புள்ளைங்கரெண்டும்தூங்கீட்டங்களா,பெரியவஏதோ படிக்கணுமின்னு சொன்னா,சின்னவ துங்கீட்டான்னு நெனைக்கிறேன், எட்டிப் பாரு எனச்சொன்னதும் ரூமினுள்ளே போய் பார்த்து விட்டு வந்தவள் தூங்கீ ட்டா புஸ்தகத்த நெஞ்சு மேல வச்சிக்கிட்டு,,,” என்றாள்,

சரிஎன அவள் நாலாவது தடவையாக போட்ட சோற்றுக்கு திரும்பவும் குழம்பு கேட்டான், சும்மா இருங்க ,இந்த ராத்திரி வேளையில போயி இவ்வளவு கொழம்ப ஊத்திக்கிட்டு கொஞ்சம் மோர சேத்து ஊத்திக்கங்க என மோரை ஊற்றினாள்.இப்பொழுது தட்டில் வெள்ளையும் சிவப்பும் கலந்த நிறமாய் சோறு,,,,,,,/

”இப்பிடி சாப்புறதுதான் ஒங்களுக்கு புடிக்குதாக்கும் என லேசாக சிணுங்கிய வளை பார்த்துக்கண்ணடித்தும் முகத்தின் ஒரு பக்கமாய் கையை மூடிக் கொ ண்டு உதடு குவித்து முத்தத்தை அவளை நோக்கி காற்றில் அனுப்பி வைத் தான்.

“சும்மாகெடங்க இப்பத்தான் யெளவட்டமுன்னு நெனைப்பாக்கும், கொஞ்சுறீ ங்க, என்றவளைப்பார்த்து ”ஆமா நா யெளவட்டம்தான்,நீ யெளவட்டிதான் ,இப்ப என்ன திரும்பவும் ஒரு தடவை கூட கல்யாணம் பண்ணிக்கிருவோம் என்றான்.

”ஆமாம் திரும்ப பண்ணுவீங்க பண்ணுவீங்க,நல்லா கிறுக்கு பிடிச்சி போயி அலையிறீங்க,இல்லைன்னா தோட்டத்துல கெடக்குற மண்ணப் பாத்து அதுல உரு வாக்கப்போற கொடியிடையாள ஒண்ணையப்போல உருவாக்கப் போறே ன்னு நிப்பீங்களா,“இப்பிடியே கறபனையிலேயே பேசிக்கிட்டு திரிஞ்சீங்கன்னா ஒரு நா இல்லா ட்டி ஒரு நா பைத்தியம் புடிச்சித்தான் திரியப்போறீங்க, பாத் துக்கங்க” என்றாள்,

“இருக்கட்டும் .அதுலயும் ஒரு லாபம் இருக்குல்ல,ஓங் பேர மட்டும் சொல்லிக் கிட்டு திரியிவேனில்ல” என்றான்.

“ஆமாம்திரியிவீங்க,திரியிவீங்க,,,,,,,என்கிறவள்தலைக்குமேலவளந்தபுள்ளைங்கள வச்சிக்கிட்டு அதுவும் பொம்பளப்புள்ளைங்கள வச்சிக்கிட்டு, நல்லா கதை விடுறீங்களே,,,,என அவள் தலையில் செல்லமாக குட்டிய குட்டிற்கு என்ன இப்பகட்டுன பொண்டாட்டிய கொடியிடையாளா சிருஷ்டிக்க நெனைக்கிறதும் நரை கூடிப்போன வயசுல ஆசையா பேச நெனைக்கிறதும் தப்பா,,ஆசையவும் மோகத்தையும் முப்பது நாளைக்கும் அறுபது நாளைக்கும் ஒப்புக்குடுத்துட்டு சம்பாத்தியம்,வாழ்க்கை, வீடு, பேறுன்னு,,,,,,மட்டுமே இருக் குறது எப்பிடி சரியா இருக்க முடியும் சொல்லு,

“இப்பிடி காதோரம் நரைச்சி தொங்குற முடியையும் பாதி நரை பாய்ஞ்சி போன தலையையும் வலது கண்ணு புருவத்துல ஒத்தையா நீட்டிக்கிட்டு நிக்குற வெள்ளை முடியையும் களைச்சிப்போன ஓங் மொகத்தையும் பாத்து ரசிக்க முடியுது.

“ஆள் அரவமில்லாத ஐந்த நேரத்துல அப்பிடியே எந்திரிச்சிப்போயி அத்து வானத்துல உலா வரலாமுன்னு ஒரு ஆசை மனசோரமா இருகுதுதான், இப்பிடி இருக்குற ஆசையெல்லாம் விட்டுட்டு பேசாம மனச மூடிக்கிட்டு சோத்த சாப்புடுன்னா எப்பிடி முடியும் என்னால”எனச் சொல்லவும் கட்டிய குளத்தின் நீரில் மிதப்பது போல அவளது விழிகள் இரண்டும் நீரில் மிதக்க மெல்ல மெல்ல நகன்று வந்து இவனது மடியில் படுத்துக்கொள்கிறாள்.

“ஆம்பள நீங்க சொல்லீட்டீங்க,பொம்பள நானு சொல்ல அவ்வளவுதான் வித்தியாசம்.என்கிற சொல்லாக்கத்துடன், படுத்திரு ந்த அவளது கண்களிலி ருந்து கழண்டு விழுந்த நீர்த்துளி இவனது தொடையை நனைத்த அதே நேரத்தில் வனது விழி தாண்டி வழிந்த கண்ணீர் அவளது முகம் நனைக்கவும் சரியாகவும் ஒரே நேர் கோட்டு நிகழ்வாகவும்,,,,,,/

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...!

vimalanperali said...

ஆகா,,,,வில் வெளித்தெரியும் அற்புத கருத்து.நன்றியும் அன்பும்!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

vimalanperali said...

அன்பும் பிரியமும் கலந்த நன்றி!

iramuthusamy@gmail.com said...

கையளவே - பிடித்திருக்கிறது. இரா முத்துசாமி http://agharam.wordpress.com

Thulasidharan V Thillaiakathu said...

வாவ்! அருமை!! உண்மையான அன்பு என்றால்... வயதானாலும் காதலுக்கும் அன்பும் குறையாது இருந்தால் அந்த வாழ்க்கையை விட வேறென்ன வேண்டும்?! ரசித்தேன்

கீதா