21 Mar 2018

ஒற்றைச்சட்டி வாழ்க்கையாய்,,,,,/

எரிந்தது அடுப்பாகவும் வெந்து கொண்டிருந்தது சட்டியாகவும் இருந்தது.

டீக் கடை வெளிநடையின் இடது ஓரமாக நின்று கொண்டு வடை போட்டுக் கொண்டிருந்த மாஸ்டர் கொஞ்சம் ஒல்லியாகவும் ஒடிசலாகவும் இருந்தார்,

மாஸ்டர்களுக்கே உண்டான உடல் லட்சணம் போலும் அது,

கொஞ்சம் கசலை கலந்துமாய் இருந்த அவரது தோற்றம் அந்த இடத்திற்கு பொருத்தம் போல் பட்டதாய் சொன்னார் கடைக்கு டீ க்குடிக்க வந்திருந்தவர்,

”அத ஏன் கேக்குறீங்க அவரு சொன்னா கேக்கமாட்டேங்குறாரு,தினசரி காலை யில சாப்புடுறதில்ல,இன்னைக்கி நேத்து இல்ல,கிட்டத்தட்ட பத்து வருஷத்து க்கும் மேலா இதுதான் அவரோட அன்றாட வாடிக்கையா இருக்கு,ஏங் இப்பிடி பண்ணீறீங்கன்னு கேட்டா விடு ஒரு வேளை சாப்புடலைன்னா செத்தா போயிறப் போறோம்ன்னு லாஜிக்பேசுறாரு,என்ன சொல்லி அவருகிட்ட நான் சம்மதிக்க வைக்க முடியும் சொல்லுங்க,பொம்பள நான் என்னால இவ்வளவு தான் சொல்ல முடியுது,

“ஓரளவுக்கு மேல சொன்னா கேவிச்சிக்கிருவறோன்னு பயமா வேற இரு க்கு,தலைக்கி மேல வளந்த புள்ளஇருக்கான் ,காலேஜ் படிக்கிறான் அவன் கிட்ட கேட்டாத்தான் தெரியும் அவரப்பத்தின உண்மை, அவந்தான் அவரு கூட ஆஸ்பத்திரிக்கி போறான் வர்றான்.என்ன கேட்டாலும் சொல்ல மாட்டான், பெரிய டாக்டர்கிட்டயெல்லாம் ஒண்ணும் காமிக்கல, ஹோமியோபதி டாக்டர் கிட்டதான் காமிக்கிறாரு,

“வாரம் தவறாம போயி வர்றாரு,ஒரு தடவை பையன் இல்லை ,நாந்தான் கூட போயிட்டு வந்தேன், அப்பதான் டாக்டர் சொல்றாரு,”ஒண்ணும் இல்ல ஒங்க வீட்டுக்காரரு ஒடம்புக்கு,அவரு சில பழக்க வழக்கங்கள கடை பிடிக்கணும் ன்னு நெனைக்கிறாரு. அதுனால அவரோட ஒடம்புக்கு பெரிசா பாதிப்பு ஒண்ணும் கெடையாது. அவருக்கு அப்பிடி இருக்கணுமின்னு ஆசை ,இருந்துட்டுப் போறாரு விடுங்களேன்,

”காலையில ஒரு வேளை சாப்பாட மட்டும் இல்ல,மதியம் கூட அரை வயிறு தான் சாப்புடுறாரு,ராத்திரிக்குக் கூட கொஞ்சமாத்தான் சாப்புடுறதா சொன் னாரு” என டாக்டர் சொன்னபொழுது ”ராத்திரி கடை முடிஞ்சி வரும்போது வெளியில சாப்புட்டுட்டு வந்துர்றாரு,அதுனாலஎவ்வளவு சாப்புடுவாருன்னு தெரிய மாட்டேங்குது.ஏங்கிட்டயும் சொல்ல மாட்டாரு,இன்னைக்கி கடையில சாப்புட்டுட்டு வந்துர்றேன்னு மட்டும் சொல்லுவாரு,சமயத்துல கொஞ்சம் சீக்கிரம் கெளம்பீட்டாருன்னா எங்களுக்கும் சேந்து வாங்கீட்டு வந்துருவாரு, என்ன அந்த புரோட்டா சால்னாவும் தவிர்த்து ஒண்ணும் இருக்காது,”ஏன் இப் பிடியா வாங்கீட்டு வர்றீங்க,ஏங்கிட்ட சொன்னீங்கன்னா ஏதாவது வித்தி யாசமா வாங்கீட்டு வருவேன்லன்னு மகன் சொல்றதுக்கு நான் என்ன செய்ய ட்டும்கண்ணு,எனக்குதெரிஞ்சதுஇதுதான்,“ஹோட்டலுக்குன்னு போயிட்டா இப்பிடித்தான் வாங்கி பழகீட்டேன்,வேற ஒண்ணும் எனக்கு தெரியாது வேற என்ன இருக்குன்னு ஏறெடுத்தும் பாக்குறதில்லன்னு சொல்லுவாரு. பையனும் சிரிச்சிக்குவான்,பெரிசா ஒண்ணும் சொல்லிக்கிற மாட்டான்,

“ஆனா இதேது அவன் கடைக்கி போயி வாங்கீட்டு வந்தான்னா அவர விட கொறச்சலான விலையில என்னென்னமோ வித விதமா வாங்கீட்டு வருவா ன். சாப்புடவும் நல்லா இருக்கும் ,சலிப்பும் தட்டாது.அவருகிட்ட அத சொன்ன முன்னா புதுசு புதுசுதான், பழசு பழசுதான்னுக்குருவாரு.“பழசோட கைபுடிச்சி புதுசுக சிறப்பா வரட்டும் நல்லதுதானன்னு சிரிச்சிக் கிருவாரு,

”அதுக்கு பையன் உடன் பட மாட்டான்.ஆமாம் நீங்க பழசெல்லாம் ஒண்ணு சேந்துங்கீன்னா பழம் பெருமை பேசியே கொண்ணு போடமாட்டீங்க, எல் லாம்,,,,,,,,,,

”இருக்கட்டும்டா மகனே ,நீயி சொல்ர படியே இருந்துட்டு போறோம்.அது உள்ள இருந்து சத்தம் குடுக்கப்போயிதான நீயி முழிச்சிக்கிருற ,அத ஏத்துக்க மொதல்ல,உள்ள கெடகுறதுதா வெளிய வருது,வெளிய வந்து கொளம் குட்டை,கம்மாய்,ஏரின்னு திரியுது,சமயத்துல அணைகட்டு ஓரமாக் கூட குடி இருக்குது,அப்பிடி இருக்குறதுகதான் சமயத்துல விஸ்வரூபம் எடுத்து காண்பி க்குது.அப்பிடி காண்பிக்கிறது ஒங்களுக்கு சமயத்துல ஒதவுது, கை குடுக் குது.அப்பிடி காண்பிக்கிறத நீங்க கைபிடிச்சி நடக்க ஆரம்பிச்சீறீங்க” என்பார்,

”அதை ஒத்துக்குறாத மகன் இருந்தாலும் பழசு பழசுதம்பா,,புதுசு புதுசு தாம்பா,இந்தா புரோட்டாவத்தவிர்த்து வேற எதையும் நெனைச்சிப்பாக்க தெரியாத மனசு போலதான்,,,,ன்னுவான்.

“அவன் சொல்றதும் அந்த நேரத்துல சரின்னுதா தோணும்,சரின்னு தோணு னது ஒருபக்கம், அப்பாவும் புள்ளையும் சொத்து சொகம் வீடு வாசல் தாண்டி தர்க்கமா பேசுறாங்களேங்குற சந்தோஷம் ஒருபக்கமா இருக்கும் போது மனசு சந்தோஷத்துல விரிஞ்சி போகும்,இப்பிடியே சிரிப்பும் பேச்சுமா எல்லாம் ஒண் ணா ஒக்காந்து சாப்புடுவோம்.வயிறும் மனசும் நெறைஞ்சிரும்” என்கிறாள் அவரது மனைவி,

அடர்த்தியான கனம் கொண்ட இரும்புச்சட்டி,அகலமாய் தன் வாய் திறந்து காணப்பட்டது.இது போலான சட்டிகள் செய்வதற்கு என தனித்திறமையான ஆட்கள் வேண்டும் போல் இருக்கிறது,

எரிந்து கொண்டிருந்த நெருப்பு மிகைப்பட்டு விடாமலும் தாழ்ந்து போய் தெரியாமலுமாய் அடுப்புக்குள் அடை கொண்டு தெரிந்தது,

கனன்று எரிந்த தீயின் நாவுகள் அவ்வப்போதாய் அடுப்புக்கு வெளியே எட்டிப் பார்த்தும் உள்ளமுங்கிப் போயுமாய்,/

கொஞ்ச நேரம்தான் பார்த்து கொண்டிருந்திருப்பான் அப்படி எரிந்து கொண்டி ருந்த தீயை.இவன் நின்று டீக்கிளாஸ் பிடித்திருந்த இடத்திலிருந்து அடுப்பின் உள் வெளிவரை உற்று நோக்க முடிந்தது.அடுப்பின் உள் சுவரில் இடது பக்கமும் வலது பக்கமுமாய் கொஞ்சம் விரிசல் விட்டும் வெடிப்பு வாங்கி யுமாய்/

அனேகமாய்சுவர் முழுவதுமாய் அப்படி வெடிப்பு வாங்கித்தான் இருக்க வேண் டும் போலிருக்கிறது,வெடிப்பின் விரிசல் அடுப்பின் மேல்ப்பரப்பு முழுவதுமாய் பட்டுத்தெரிந்தது,மேலே சாணி வைத்து மொழுகப்பட்டிருந்ததால் வெடிப்புகள் பெரிதாய் தெரியவில்லை,

கடைக்காரரிடம் கேட்ட பொழுது இது போல் அடுப்புகள் செய்ய கொஞ்சம் செலவாகும், பார்த்தால் சிம்பிளாகத்தான் தெரிகிறது.ஆனால் இந்த அடுப்பு அமைக்கிறதுக்குள்ள செலவு அத்துட்டுப்போயிரும்,ஆனாலும் எங்களப் போல கடைகளுக்கு இது தேவையாத்தான் இருக்குது.என்ன செய்ய வடை போட பால் சட்டி காய வை க்கன்னு நெறைய தேவைகள் நெறைவேறிப் போகுது, அதுனால செலவானாலும் பரவாயில்லைன்னு இது போலான அடுப்புகள அமைச்சிருறோம்.என்கிற கடைக்காரர் சென்ற வாரம் கடைக்கு சென்றிருந்த போது கடையில் வேலைக்கு இருக்கிற பையனிடம் கொஞ்சம் கோபமாய் பேசிக் கொண்டிருந்தார்,

“ஏன் ஒனக்கு இந்த வயசுலேயே இப்பிடி ஒரு ஆசை,அப்பிடி என்ன வேண்டிக் கெடக்குது, அதக் குடிக்கணுமுன்னு,,,நான் மாஸ்டரையே சத்தம் போட்டுக் கிட்டு இருக்கேன் ,இங்க வச்சி குடிக்கக்கூடாதுன்னு.அவரு சரின்னு ஒத்துக் கிட்டு இப்பத்தான் ஒரு வழிக்கு வந்துருக்காரு,நீயி என்னடான்னா ,,இந்த வயசுல போயிக்கிட்டு,,,,,இப்பயே அத தொட்டைன்னு வையி அவ்வளவுதான் கெட்ட நீயி,,பாத்துக்க,இனிம தண்ணி போடுறதா இருந்தா கடைக்கு வேலை க்கு வர வேணாம் என,,,/

“மாஸ்டரும் ஆமாம் அவரு சொல்லுறது வாஸ்தவம்தான்,நாங்களும் பழகீ ட்டு விடமுடியாம ஏண்டா இந்தச்சனியன பழகுனோம்ன்னு வருத்தப் பட்டுக் கிட்டு இருக்கோம்,எங்களுக்கு இனி கவலை இல்லைப்பா வயசாகிப் போச்சி, காடு வா வான்னும்,வீடுபோ போன்னும் சொல்லுற வயசு,ஆனா ஒனக்கு அப்பிடியில்ல, இனிமத்தான் வாழ்க்கை ஆரம்பமாக போகுது, பாத்துக்க”,,,,என மாஸ்டரும் கடைஓனருடன் சேர்ந்து ஒத்து ஊதிக் கொண்டிருந்தார்,

அடுப்பிலிருந்து சற்று தூரத்தில் தள்ளி வைக்கப்பட்டிருந்த வடை போடுவதற் கான மாவு இருந்த சட்டியை எட்டித் தொட்டு வடை மாவை வழித்து வழித்து காய்ந்து கொண்டிருந்த எண்ணெய்ச் சட்டிக்குள்ளாய் போட்டுக் கொண்டிருந் தார் அதன் வடிவம் மாறாமலும் மாவு மிகைப்பட்டு விடாமலுமாய்,,,,/

மிகைப்பட்டுவிட்டால்தான்என்ன போய் விட்டுப் போகிறது.என விட முடிய வில்லை மாஸ்டரால்,

நம் கடை என்கிற உரிமை வேலை பார்க்க வந்த இடத்தில் தலை தூக்கி விடுகிறதினாலும் மிகை ஒட்டுதலாலும் வருகிற பிரச்சனை இது, வந்தோமா, வேலையை பார்த்தோமா என்றில்லாமல் சொந்தக் கடை போல தலையில் தூக்கி போட்டுக் கொள்கிறதால் வருகிற பிரச்சனை என்கிறார் நண்பர் ஒருவர்,

வடை மாஸ்டரிடம் கேட்டால் ”அப்படியெல்லாம் இல்லை சார்,வாங்குற சம்ப ளம் ஒடம்புல சேரணுமில்ல, சும்மா ஒக்காந்துட்டு செல்போன்ல போன் பேசிக்கிட்டும்பொரணிபேசிக்கிட்டும்பாட்டு கேட்டுக்கிட்டுமாஇருந்தா எப்பிடி,,,? வாங்குற சம்பளம் கொஞ்சமாவது ஒடம்புல ஒட்டணுமா இல்லையா,,,? அது னாலத்தான் இப்பிடியெல்லாம் இருக்குறமே ஒழிய வேற ஒண்ணும் இல்ல இதுல நீங்க ஏதோ பெரிசாஒண்ணும்யோசிச்சி மெனக்கெட்டுர வேணாம்” என்றார்,

அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ரோட்டில் சைக்கிளில் மணியடித்து சென்றவரின் சைக்கிளுக்கு குறுக்கால் ஒருவன் விழுந்து விட்டான்,நல்ல போதை போலிருக்கிறது,இந்த சாயங்கால நேரத்தில் என்ன கஷ்டமோ அவனுக்கு,

வயது அப்படி ஒன்றும் அதிகப்பட்டெல்லாம் தெரிந்திருக்கவில்லை. முப்பது அல்லது முப்பதைந்து வயதிற்குள்ளாக இருக்கலாம் போலிருந்தது. நல்ல வேளையாக விழுந்தவன் சைக்கிளின் நடுவில் விழாமல் ஓரத்தில் விழுந்து விட்டான்,இல்லையென்றால் சைக்கிளில் போனவர் அவன் மேல் சைக்கிளை ஏற்றி அவரும் விழுந்திருப்பார்,

ஆனாலும் சைக்கிளை ஓட்டிப்போனவர் கொஞ்சம் அளமளர்ந்துதான் போனார், நல்ல வேளையாக விழவில்லை அவர்,அவரும் அவன் மீது விழுந்திருந்தால் பேச்சு குடிகாரர்கள் இரண்டு பேர் ரோட்டில் தவறி விழுந்து விட்டார்கள் என ப்ரேக்கிங் நீயூஸ் ஆகிப்போயிருக்கும்.

இதெல்லாம் நடந்தது கடையின் முன்னால் என்பதால் டீக்குடித்துக் கொண் டிருந்த இவனும் வடை மாஸ்டருமாய் சேர்ந்து போதையில் கீழே விழுந்தவ னை தூக்கி வழியனுப்பி வைத்தார்கள்.

அவன் என்னடாவென்றால் ”என்ன மயித்துக்கு என்னைய தூக்குன”டீக்கடை அருகாமையிலேயே வந்து விழுந்து விட்டான் சலம்பியவாறே,,,/

இது பரவாயில்லை,போன வாரத்தின் மாலை நேரமாய் இவனும் கனியண் ணனுமய் பஜார் போய்க்கொண்டிருந்த போது ரோட்டின் ஓரமாக சென்று கொண்டிருந்தவன் இவர்கள் இருவருமாய் போய்க் கொண்டிருந்த வண்டியின் குறுக்காய் விழுந்து விட்டான் தலை நிறைந்த போதையில் தள்ளாடியபடி/

அவன் தள்ளாடியபடியே வரும்போதே தெரியும் கண்டிப்பாக விழப் போகிறா ன் என,,/அதனால் வேகமாக வந்து கொண்டிருந்தவர்கள் விழப் போனவனை நிதானித்தது போல் கொஞ்சம் தூரமாகவே நிறுத்தி விட்டார்கள் வண்டியை. வேகம் குறைத்து வண்டியை நிறுத்தவும் தள்ளாடி வந்தவன் விழவும் சரியாக இருந்தது.

விழுந்தவனைகடந்து போய் விட்டார்கள் கொஞ்ச தூரம் சென்றதும் கனியண் ணந்தான் திரும்பிப் பார்த்துச் சொன்னார்,சார் அந்தப்பையன் இன்னும் அப் பிடியேதான் விழுந்து கெடக்கான்,இன்னும் எந்திருக்கலை என,,,,/அப்படியே வண்டியை திருப்பி வந்தவர்கள்விழுந்துகிடந்தவனின் அருகில் நிறுத்தி அவன் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி உட்கார வைத்தார்கள்,

எழுந்து அமர்ந்தவனால் சரியாகக்கூட உட்கார முடியவில்லை. தள்ளாடிய படியே உட்கார்ந்த அவன் முதலில் கையெடுத்து கும்பிட்டவனாய் இவனிடம் மன்னிப்பு கேட்டான்,

“கனியண்ணந்தான்சொன்னார்,”எங்ககிட்ட மன்னிப்பு கேக்குறதெல்லாம் இருக் கட்டும்.இந்த வயசுல இப்பிடி ரோட்டுக் காட்டுல விழுந்துகெடக்குற அளவுக்கு குடிக்கணுமுன்னு என்ன இருக்கு, ஒனக்குஅப்பிடிஎன்னப்பா வந்துச்சி சங்க டம் சொல்லு”என்றார்,

அவரின் பேச்சிற்கு முதலில் மௌனம் காத்தவன் கொஞ்சம் அழுகை கலந்து சொன்னான்,”சார் மத்தியானத்துல இருந்து நான் சாப்புடவே இல்லை சார். எனக்கு லேட்டாத்தான் கல்யாணம் ஆச்சி சார்,கல்யாணம் ஆகும் போது இரு பத்தி ஒன்பது வயசு இருக்கும் ,ஒத்தைப்படை வயசுலதான் கல்யாணம் பண்ணனும்ட்டாங்க,இருபத்தி அஞ்சி வயசுல இருந்து கல்யாணம் பண்ண னும், பண்ணனுமுன்னு முயற்சி பண்ணி கடைசியில இந்த இருபத்தி ஒன்பது வயசுலவந்துமுடிஞ்சிச்சி,கரெக்டாஒருவருஷத்துலகொழந்தையும்பெத்துக்கிட்டா ஏங்பொண்டாட்டி/,போனபத்துநாளைக்கி முன்னாடிதான் கொழந்த பெறந்திச்சி. இப்ப அவ ஆஸ்பத்திரியில இருக்கா ,சிசேரியன் பண்ணித்தான் கொழந்தைய எடுத்தாங்க,அதுக்கு இருபதாயிரம் வரை செலவாச்சி,

“நான் வேலை பாக்குறது ஒரு டின் பேக்ட்ரியில,,/அன்றாடம் அஞ்சிக்கும் பத்துக்குமேகஷ்டப்படுறவுங்க நாங்க,திடீர்ன்னு இருபதாயிரம்ரூபாய்க்கு எங்க போறதுசொல்லுங்க,நான்வேலைபாக்குறகம்பெனிமொதலாளிகிட்டகொஞ்சம், சொந்தக்காரவுங்ககிட்டகொஞ்சம்,சீட்டுப்போட்டுவச்சிருந்தயெடத்துலகொஞ்ச முன்னு தேத்தி கொண்டு போயி குடுத்தேன்,

“நல்லபடியா ஆபரேஷன் பண்ணி கொழந்தைய வெளிய எடுத்துட்டாங்க,இப்ப அம்மாவும் புள்ளையுமா நல்லா இருக்காங்க,

“ஆனா நான் இனிம அவள நாளைக்கி இல்ல நாளக்கழிச்சி ஆஸ்பத்திரியில இருந்து டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போகணும், வீட்டுக்குப் போனதும் அவளுக்கும் கொழந்தைக்கும் பாக்கணும்.அந்தச்செலவு வேற இருக்கு, சாதாரண அன்றாட கூலி நான் இதுக்கெல்லாம் எங்க போகட்டும் சொல்லுங்க,,,,”என்றார்.

அதான் மனசு பொறுக்க மாட்டாம கொஞ்சம் சாப்புடுட்டேன்,சாப்டுட்டு நேரா வீட்டுக்குப்போயி கொஞ்சம் படுத்து எந்திரிச்சி வரலாமுன்னு இருந்தவன் மதியத்துல இருந்து அதையே நெனைச்சி நெனைச்சி குடிச்சிக்கிட்டே இருந் தேன் அதான் தூக்கிருச்சி போல இருக்கு,நாலைஞ்சி யெடத்துல விழுந்தெந் திரிச்சி மொகத்துல காயத்தோட அதுலயிருந்து வழியிற ரத்தத்ததொடைக்க மதி இல்லாமக்கூட திரியிறேன்,

”இதோட எப்பிடிப்போயி ஏங் பொண்டாட்டி மொகத்துல முழிக்கிறதுன்னு தெரி யல சார்,,” எனப் புலம்பியவனிடம் கையில இருக்குற காச வச்சி திரும்பத் திரும்பப் போயி ஊத்திக்கிட்டு இருக்காம மொதல்ல போயி ஏதாவது கடையப் பாத்துசாப்புடு எனச் சொல்லியவர்களாய் அகன்றார்கள் அந்த இடத்தை விட்டு/

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் பதிவு கண்டு நீண்ட நாட்களாகிவிட்டன
தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே

vimalanperali said...

சிற்சில பணிகளின் காரணமாய் தாமதம்.இனி தொடர்வேன் அவசியம்!

Thulasidharan V Thillaiakathu said...

பாவம்!! மனம் கனக்கிறது இப்படியான மனிதர்களைப் பற்றிய விவரணங்கள்...தினமுமெ அவர்களுக்குச் சவால்தான்!!

கீதா

திண்டுக்கல் தனபாலன் said...

குடிகாரர்கள் தானாக திருந்தினால் தான் உண்டு...

vimalanperali said...

வணக்கம் துளசிதரன் சார்,
அன்பும் கனிவுமான
கருத்துரைக்கு நன்றி,,/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
திருந்தாத குடிகாரர்கள் என ஒரு
கேட்டகிரி இல்லை எனவே நினைக்கிறேன்.
அடிமையாகிப்போன மனது போதை தேடுகிறது எனக்கொள்ளலாம்,
தவிர இது போலான குற்றச்சாட்டுகள்
பொதுவாக சாமான்யனை நோக்கியே
எழுப்பப் படுகிறது,உடல் உழைப்புத்
தொழிலாளியான அன்றாடக்கூலிக்காரகள்,
விளிம்பு நிலையில் நின்று வாழ்க்கையை
நடத்துபவர்கள் அஞ்சுக்கும் பத்துக்குமாய் அல்லாடுபவர்கள்தான் இது போலான
குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிறார்கள்,
தண்ணியடிச்சிட்டு ரோட்டுல கெடக்கான்,
இலவசத்துக்கு மொத ஆளா
போயி நிக்கிறான்,
கோயில் திருவிழாவுல சத்தமா
பாட்டு வச்சி கேக்குறான்,ஓட்டுக்கு
காசு வாங்கனுமின்னு அல்லாடுறான்,,,
என்பது போன்ற மலினாமான
இன்னும் இன்னுமான பல தூற்றல்கள்
அவர்கள் மீதுதான் வாறி
தூற்றப்படுகிறது,வாஸ்தவம் எனவே
வைத்துக்கொள்வோம்,
அவர்களை அப்படி வைத்திருப்பது
யார் குற்றம்,,,,?
அவர்களது குற்றமா,இல்லை
அமைப்பின் மீதான குற்றமா,
பொதுவாகவே
குடி என்பது ஓய்வு நேர பொழுது போக்கு
என்கிறார்கள் மேலை நாடுகளில்,
ஆனால் இங்கோ,,,
குடியை முற்றிலுமாக ஒழிப்பது
என்பது சிரமமே,
ஆனால் அதை கட்டுக்குள்ளும்
தெளிவான ஒரு வரியறைக்குள்ளுமாய்
கொண்டு வரலாம்,,/
அப்படி கொண்டு வரும் பொழுது
தானாக திருந்தி விடுவார்கள்,,,/
நன்றி சார் கருத்துரைக்கு,,,/

அவர்களது குற்றமா,இல்லை அமைப்பின் மீதான குற்றமா,