24 Feb 2018

வணக்கம் சார் நல்லாயிருக்கீங்களா,,,,/

"சார் வணக்கம் நல்லாயிருக்கீங்களா,,," என்கிற குரல் கேட்டு நிமிர்ந்து பார்க்கி றான் இவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து.

வடக்கு பார்த்த முகமாய் நீண்டிருந்த கவுண்டரில் மூன்றாவது நபராய் அமர்ந் திருந்த இவன் கம்ப்யூட்டர் மற்றும் எழுது பொருட்களுக்கு மத்தியிலாய்,,,/

பொதுவாய் காலையில் குனிகிற தலையை மாலை வீடு போகும் நேரம்தான் நிமிர்ந்து பார்க்கச் செய்வான்.

மதியம் சாப்பாட்டு வேளையில் மிகவும் கஷ்டப்பட்டும் வெகு பிரயனத் தனப் பட்டுமாய் தலையை தூக்கி எழுந்து போய் சாப்பிட்டு வருவதுண்டு,அதுவும் பெரிய மனது பண்ணி,,,,,,,,/

என்னவோ போனால் போகிறது சாப்பிட்டுத்தொலைக்கிறேன்என்பதுபோலான மனோநிலையில்தான் போய் சாப்பிடுவான்,

ஆனால் சாப்பிடப்போகும் போது இருக்கிற மனோ நிலை சாப்பிடும் போது காணாமல் போய் விடும்,”என்ன கனியண்ணே” நல்லாயிருக்கீங்களா என்று ஆரம்பித்துதான் மௌனம் உடைப்பான்.

கனியண்ணன் இவனுடன் வேலைபார்ப்பவர்,இவனது உற்ற நண்பரும் கூட/ பணிச்சூழல் காரணமாக காலையிலிருந்து மனங்களில் ஒட்டி உறைந்து மன கிலேசங்கள் உடைபடுகிற இடமாக பெரும்பாலும் சாப்பிடுகிற தளம்தான் அமைந்து போகிறது,

”என்னகனியண்ணேஎப்பிடிஇருக்கீங்க,என இவன்தான் ஆரம்பிப்பான் பேச்சை, என்ன ஜி கூப்புட்டா திரும்பிக்கூட பாக்க மாட்டேங்குறீங்களே”,,,, என்கிற கண்ணனின்கிண்டல் பேச்சிற்கு பெரும்பாலுமாய் பதில் சொல்பவனாய் இவன் தான் இருப்பான்.

“அவரு என்ன செய்வாரு பாவம், அவருக்கு இருக்குற பணி மிகுதியில எதையின்னு கவனிப்பாரு ஜி அவரு பாவம்.நாலாபக்கமும் இருந்து அவருக்கு வர்றமனநெருக்கடியையும் பிரச்சனையையும் சாமாளிக்கவே நேரம் காணாம இருக்குறப்ப ஒங்க குரலுக்கும் கூப்புடலுக்கும் அவரு செவிசாய்க்க முடியுமா சொல்லுங்க,அவரு செவி சாய்க்கிறதும் திரும்பிப்பாக்குறதும் ஒரே ஒரு ஆளு குரலுக்குதான் ஜி, நம்ம எல்லாரும் சேந்து தொண்டைத்தண்ணி வரள ஆயி ரம் சத்தம் குடுத்தாக் கூட திரும்பிப்பாக்காதவரு இல்லைண்ணா கால் மணி நேரம் கழிச்சிதான் என்னன்னு கேக்குறவரு,அந்த சிலிக்கான் சிலை வாசல்ல வரும் போதே அவர்ப்பாத்து வணக்கம் சார்ன்னு சொல்லீட்டு வருது, இவரு இங்க பத்தடி தூரத்துக்கு மேல தள்ளி நிக்கிறவரு பாத்த வேலைய பாத்த படி போட் டுட்டு ஒடனே திடு திடுன்னு ஓடிப்போயி என்னம்மா நல்லாயிருக்கீங்களா டீ சாப்பிடுறீங்களான்னு கேக்குறாரே ஜி, இவருஎப்பிடி நம்ம குரலுக்கு செவி சாய்ப்பாரு சொல்லுங்க” என்கிற கலாய்த்தலுக்கும் கேலிக்குமாய் உள்ளாகிப் போகிற மனிதன் அவராகிப்போய்தான் இருப்பார் பெரும்பாலான சாப்பாட்டு நேர மதியங்களில்

அது பற்றி அவரிடம் ஒரு சின்ன கோபமோ வருத்தமோ இருக்காது.

அது பற்றி அவரிடம் கேட்கும் போது சொல்வார்,”விடுங்க சார்,ஒரு வகையில பாக்கும்போதுநம்ம கூட வேலை பாக்குறவுங்தான சார் நம்மள கேலி பண்ணு றாங்க,கேலி பண்ணுறதுக்காவது நம்ம பேர உச்சரிக்கிறாங்களே சார்,வேற மாதிரி யெசக்கேடாவும் தூசனையாவும் பேசாம இப்பிடி பேசிக்கிறதுக்காக வாவது நம்ம பேரு அவுங்க மனசுலயும் சொல்லுலயும் அரை படுதே அதுக் காவாவது அவுங்க பேசட்டும்ன்னு விட்டுறனும் சார்”, என்கிற கனியண்ணை பார்கிற கணங்களில் அவர் மீதான மதிப்பும் ஆச்சரியமும் இன்னமும் கூடித் தான் போகிறது.

எப்படி இருக்க முடிகிறது இவரால் இப்படி,என்ன பேசினாலும் ஒரு மென் சிரிப்பு, ஒரு அலட்டலின்மை,ஒரு பாந்தம்,,,,,,,என்கிற இதர இதரவானவற்றிற் குள் அடங்கி போக,,,?அதற்கு ஒரு தனி மனமும் பெருந்தன்மையும் வேண் டும்தான் போலிருக்கிறது,அது அவரிடம் இருக்கிறது,அது அவரை விட்டு அகலாதவரை நன்றாக இருப்பார் அவர் என சாப்பிட்டு முடிக்கிற போதும் அதன் பின்புமாய் அவரை மனதார வாழ்த்திவிட்டுத்தான் அடுத்த வேலை யை ஆரம்பிப்பான்,அப்படியே வாழ்த்த மறந்து போனாலும் மறந்து போகிற நாட்க ளை சேர்த்து வைத்து பின்பு ஒரு நாளில் வாழ்த்திக்கொள்வான் மனதா ரவும் வாயாரவும்.

வீட்டில் நண்பர்களிடம் தோழர்களிடம் எதிர்பட்டு கேட்பவர்களிடம் கூட சொ ல்வான் அவர் பற்றி,அப்படியா என அவர்கள் படும் ஆச்சரியத்தை கனியண் ணனிடம்பகிர்ந்து கொள்கிற போது அவர் சொல்வார்,,,,

”இதுல என்ன சார் ஆச்சரியம் இருக்கு,ஏங் பழக்கம் அது,இங்க ஆபீஸில மட் டும்ன்னு இல்ல வீட்ல ஊர்ல,,இன்னும் எல்லாயெடத்துலயும் அப்பிடித்தான் இருப்பேன்.ஏங் கொணம் அப்பிடி, அப்பிடி இருக்குறதுனால நான் ஒண்ணும் தாழ்ந்துறப்போறதில்ல,என்னைய தாழ்ச்சியா நெனைக்கிறவுங்க ஒசந்துறவும் போறதில்லை,நல்லாப்பாருங்க, ஒருத்தன தாழ்ச்சியாவும் தூசணையாவும் அடி மையாவும் நெனைக்கிறவுங்க பெரிசா ஒண்ணும் கெட்டிக்காரத்தனமா சாதிச் சிறப் போறதில்ல,இன்னும் சொல்லப் போனா அந்த மாதிரி ஆள்கதான் மனச ளவுல தொரட்டுப்பட்டும் தொந்தரவு பட்டுக்கிட்டுமா இருப்பாங்க,அத வெளி யில காண்பிச்சிக்கிறாம/”,,,,,

”இப்பிடித்தான் எனக்கு தெரிஞ்சவரு ஒருத்தரு வாங்கிப்போட்ட பிளாட்ட சுத் தம் பண்ணுறதுக்கா ஒருத்தன வேலைக்கு கூப்பிட்டுருக்காரு,அவனும் வந்து சம்பளம் எதுவும் பேசாமா மூணு நாளு ஒத்தை ஆளா நின்னு வேலை செஞ்சிக்கிட்டு இருந்துருக்கான்,வேலை முடிஞ்சி போகும் போது அவனுக்கும் வேலைக்கு கூப்புட்டவருக்கும் சம்பளத்துல ஏதோ பிரச்சனையாகிப் போச்சி, அவரு சொல்லீருக்காரு,மூணு நாளுதான வேலை பாத்துருக்க,இந்தா மூணு நாளுக்கான கூலி ,வெளியில ஒரு நிமிந்தாளுக்கான கூலி என்னவோ அத ஒனக்கு குடுத்துருக்கேன்,நல்லபடியா வாங்கீட்டு சத்தமில்லாம போன்னு, வேலைக்குவந்தவன்சொல்லிருக்கான்,நீங்கசொல்றதெல்லாம்வாஸ்தவம்தான், இல்லைன்னு சொல்லல,ஆனா நான் மூணு நாளும் ஒத்தை ஆளா அஞ்சாளு வேலைசெஞ்சிருக்கேன்.ஒங்ககிட்டகேட்டப்பகூடகொறயான்னாலும்வேலைய முடிநான் பாத்து சம்பளம் போட்டு குடுத்துர்றேன்னு சொல்லீட்டு இப்ப இப்பிடி கை விரிச்சீங்கின்னா எப்பிடின்னு சொல்லி கேக்கவும் அவரும் பதில் பேசவும் பதிலுக்கு பதிலான பேச்சுக வளந்து ஒரு நேரத்துல பேச வார்த்தையில்லாம போன அவன் “கூலிக்காரன் வாயில விழுந்தா நீங்க நல்லா இருக்க மாட்டீ ங்க, நாசமா போயிருவீங்கன்னு,,,”அவருவீசி எறிஞ்ச சம்பளத்த வாங்கீட்டு போயிட் டான்,

”பொதுவா வறியவன் சொல்லு பலிக்கும்முன்னு சொல்லுவாங்க,அத மூட நம்பிக்கைன்னு சொல்றவுங்க சொல்லீட்டு போகட்டும் கூட, ஆனா அவன் அன்னைக்கிசொன்ன சொல்லு கொஞ்ச நாள்ல பலிச்சிப்போனது மாதிரி ஆகிப் போச்சி பிளாட்க்காரர் விஷயத்துல/

வாங்கிப்போட்ட பிளாட்ட சுத்தம் பண்ணுனதோட சரி,அவரால அதுல மேக் கொண்டு ஒண்ணும் செய்ய முடியாம போச்சி,பொழப்புக்குன்னு சின்னதா ஒரு கடை வச்சிருந்தாரு,அதுவும் அப்பிடியே யேவாரம் இல்லாம சரிஞ்சி போச்சி, என்னத்தையோ ஒண்ணு ரெண்டு நடந்த யேவாரம் கூட இல்லாம போயி ருச்சி,வீட்டுக்காக பேங்குல கேட்டுருந்த கடனும் கெடைக்கல,மனுசன் நொந்து போனாரு நொந்து,,,,கூடவே ஒடம்பு படுத்துன பாடு வேற,,/

“அப்பத்தான் ஒரு நா தற்செயலா எங்கயோ வேற வேலத்தளத்துல பாத்த அந்த கூலிக்காரங்கிட்ட மனசார மன்னிப்பு கேட்டுருக்காரு,

”ஒனக்கு ரெண்டு நாள் கூலி கூட குடுக்கமாட்டேன்னு சண்ட போட்டேன், இப்ப ஏங்பொழப்புநடுத்தெருவுல வந்து நிக்குதுதம்பின்னு” சொல்றீருக்காரு, வருத்த ப்பட்டு,

அவன் என்ன செய்வான் பாவம்,”அவன் சொல்லீருக்கான் ,ஐயா நான் சொன்ன சொல்லாலத்தான் இந்த நெலம வந்துருச்சின்னு என்னைய தப்பா நெனைக் காதீங்கய்யா,ஏதோ ஒரு வேகாளத்துல பேசிட்டேன், அதுக்கப்புறமா ஒங்களப் பாத்து பேசுன பேச்சுக்கு வருத்தம் தெரிவிச்சிறலாமுன்னு நெனைச்சேன், ஆனா ஓடிக்கிட்டே திரிஞ்ச ஓட்டத்துல எல்லாம் மறந்தும் போச்சி,இப்ப வந்து இப்பிடி சொல்றீங்களே ஐயா,இந்த நிலைமைக்கு நான்தான் காரணமுன்னு நெனைச்சிங்கின்னா மன்னிச்சிக்கங்கையான்னு சொல்லீட்டு போயிட்டான்,

”அவன்போயிட்டான் அந்த நிமிஷத்துல ஆனா அவன்சொன்னசொல்லு நின்னு போச்சின்னுநெனைச்சிவருத்தப்பட்டஅவருஅப்பிடியேரொம்பநொந்துபோயிக்கிட்டு இருக்காரு இந்த நிமிஷம் வரைக்கும்/

அன்னைக்கி அவன் சொன்ன சொல்லு பலிச்சதா இல்லையாங்குறது வேற விஷயம்.ஆனாவறியவன் வாக்கு பலிக்கும்ன்னு பல பேரு பேசுனது உண்மை யாகிப் போச்சி அவரு விசயத்துல./

ஆனா அவரு இதையெல்லாம் வெளியில காட்டிக்கிறாம வெட்டி வம்பும் வீண் ஜம்பமும் பேசிக்கிட்டு அலையுறாரு,,,/”என்ற கனியண்ணன் எப்பொழுதும் இப்படியெல்லாம் பேசக்கூடியவர் இல்லை என்றாலும் கூட எப்பொழுதாவது இப்படி பேசுவார்,என அவதானித்த நாளின்றின் ஒரு பொழுதில் சாப்பிட்டு முடித்த மதியநேரத்தில் கேட்டார்.

“ஏன் சார்,முன்னாடியெல்லாம் ரொம்ப லேசா திரிவீங்க,இப்ப அப்பிடி இல்லை யே சார்,ஆனா இப்பயும் லேசா இருக்குற மாதிரிதா காண்பிச்சிக்கிறீங்க,ஆனா நல்லா தெரியுது,வம்பா ஒடம்ப இழுத்துக்கிட்டு திரியிறது.ஏங் சார்,எனக்கேட்ட நாளில் சொல்கிறான்,இவன் அவரிடம்/

“எல்லாம் ஒடம்பு படுத்துற பாடுதாண்ணே,என்ன செய்ய சொல்றீங்க,ஒரு நாளைக்கு ஒரு மாதிரியா இருக்குது ஒடம்பு,இருந்தாலும் யார் கிட்டயும் எது வும் சொல்லிக்கிர்றதில்ல,பெரிசா,தலைக்கி மேல வளந்த புள்ளைங்க இருக்கா ங்க,ஆணொன்னும் பொண்ணொன்னுமா,ஆனா அவுங்களுக்கு ஏங் ஒடம்புல இருக்குற பிரச்சனையோ ஏங் வீட்டம்மா ஒடம்புல இருக்குற பிரச்சனையோ தெரியாது.ஏங் ஒடம்பப்பத்தி அவளுக்கும் அவ ஒடம்பத்தி எனக்கும் தான் தெரியுமே தவிர்த்து அத பெரிசா வெளியில சொல்லிக்கிறதில்ல.இங்க ஆபி ஸிலயே பாத்திங்களா,ஏதாவது ஒடம்பு பத்தி பெரிசா பேசிருக்கேனா,அதக் காரணம் காட்டி என்னைக்காவது வேலையில சொணக்கம் காண்பிச்சிருக்கே னா,சொல்லுங்க,என்னைக்காவது ஒடம்பு பத்தி கவலை வந்துருச்சின்னா புருசன் பொண்டாட்டி ரெண்டு பேருமா டூ வீலர்ல கெளம்பீருவோம், புள்ளை ங்கள வீட்டுல விட்டுட்டு/கொஞ்ச நேரம் அப்பிடியே எந்த நோக்கமும் இல் லாமஎந்த வேலையும் இல்லாம ஊர ஒரு சுத்து சுத்தி வந்தாச்சின்னா சரியாப் போகும்எல்லாம்”எனச்சொன்ன நாட்களில் அது சரிதான் என ஏற்றுக் கொண்ட கனியண்ணன் சிரித்த சிரிப்புக்குள் ஒரு அர்த்தமும் உள்ளடங்கிப் போன ஒரு வெள்ளந்தித்தனமும் பளிச்சிட்டுத்தெரிந்ததாய்,,/

வணக்கம் வந்த திசையை ஏறிட்டுப்பார்த்த போது பணம் கட்டுகிற இடத்தி லிருந்து வந்த குரலை எதிர் நோக்குகிறான்.அங்கே இவனுக்கு பழக்கமான கஷ்டமர் ஒருவர் பணம் கட்டும் வரிசையில்,,,,/

“சார் வாங்க வணக்கம் நல்லாயிருக்கீங்களா,என்கிற இவனது பதில் கேள் வியை ஏற்றுக்கொண்டு ”நல்லாயிருக்கேன்” என்றார்.

“என்ன சார் வழக்கமா நான் கேக்குற கேள்விய நீங்க கேக்குறீங்களே என சிரிப்புடன் சொன்ன இவனை நோக்கி ”அது என்ன சார் ஒங்களுக்கு மட்டும் வழக்கமானதா என்ன அப்பிடி கேக்குறது,,,? கேக்குறது நீங்களாவும் சொல்றது நானாவும் ஆகிப்போறத, இந்தத் தடவ வேணுமுன்னா மாத்தி வச்சி முயல் வோம்/ கேக்குறது நானாவும் பதில் சொல்றது நீங்களாவுமா இருங்க என்ன கொறஞ்சிறப்போகுது,,,,” எனச்சொன்னவரை ஏறிட்டுவிட்டு பணம் கட்டி விட்டு வரட்டும் என காத்திருந்தான்.

பணம் கட்டும் போது நீண்ட நேரமாக இவனையே உத்துப் பாத்துக் கொண்டி ருந்தவர் இவனருகில் வந்ததும் என்ன சார் மொகத்துல வலது பக்கம் ஒரு மாதிரி வீங்கிப் போயிருக்கே எனவும்,அங்கயிருந்து பாக்கும் போது நல்லா வித்தியாசம் தெரியுது என்றார்,

“இல்ல சார்,அப்பிடி ஒண்ணும் பெரிசா இல்ல,எனக்கு அந்தப் பக்கம் ஏற்க னவே மொக பக்கவாதத்தால பாதிப்பு அடைஞ்ச பக்கம் ,அதுனால கூட ஒங்க ளுக்கு அப்பிடி தெரியலாம்.

“இல்ல சார் இது ஒங்களுக்கு இப்பத்தான் பிகினிங் ஸ்டேஜ்ன்னு நெனைக்கி றேன்,நான் ஒரு வெப் சைட் அட்ரஸ் தர்றேன்,அதுல இது போல கம்ப்ளெய் ண்ட்டுக்கு மருந்தும் ஆலோசனையும் தர்றாங்க,200 கிராம் டப்பா மருந்தோட வெலை ஜஸ்ட் 800 ரூபாதான்,வெளிநாட்டு தயாரிப்பு, வாங்கி சாப்புடுங்க பிர யோஜனமா இருக்கும்,இப்ப எந்த டாக்டர் கிட்ட வைத்தியம் பாக்குறீங்க நீங்க என்றதும் இவன் பார்க்கும் ஹோமியோபதி மருத்துவரின்பெயர் சொன்னான்,

உதட்டை சுளித்தவர் இதுக்கெல்லாம் பெஸ்ட் டாக்டர் நம்மூரில்,,,,,,,,தான் அவரைப் போயி ஒடனே பாருங்க,நல்லா தெரியுது வித்தியாசம், இதையெ ல்லாம் அப்பிடியே விட்டுறக் கூடாது,இது போல பாதி ப்பு வந்த ஒரு நாளை க்குள்ள பாத்துறனும்,

“மட்டன் ரொம்ப சாப்புடாதீங்க, பிராய்லர் கோழிகறி தவிர்த்துருங்க, முட்டை யில மஞ்ச கருவ விட்டுட்டு வெள்ளைக் கருவ மட்டும் சாப்புடுங்க, கூடவே கால்சியம் டெபிசியன்சி மாத்திரைய எடுத்துக்கங்க எனச்சொல்லி விட்டு பணம் கட்டிய ரசிதையும் பாஸ்புக்கையும் வாங்கிக்கொண்டு போனவரை ஏறிட்டவனாய் அமர்ந்திருந்தான்.

இப்பொழுது சார் வணக்கம் நல்லாயிருக்கீங்களா என்ற குரல் பின் நோக்கிப் போனதாய் இருந்தது,

4 comments:

Anonymous said...

arumai

vimalanperali said...

நன்றி அனானிமஸ் அவர்களே,கருத்துரைக்கு,,/

வலிப்போக்கன் said...

கிடைக்காதவனிடம் அதை சாப்பிடு இதை சாப்பிடு என்பார்கள். கிடைப்பவனிடம் அதை சாப்பிடாதே! இதை சாப்பிடாதே என்று மனிதர்களை பயமுறுத்துவதே நிரந்தரமாகிப்போச்சு நண்பரே...

vimalanperali said...

நன்றி சார் மனம் தொட்ட கருத்துரைக்கு!