1 Jan 2018

2018


வெண்பனி சுமந்த மென் காலைப்பொழுது,

பூச்சிகளும் புழுக்களும் பூக்களும் கூட விழித்திருக்க வாய்ப்பில்லாத இளம் காலை நேரத்தை தன்னகத்தே அடை கொண்ட காலைப்பொழுதில் விழிப்பு வந்து விடுகிறது சீக்கிரமாய்.

ஏன் அப்படியாய் வர வேண்டும் என விழிப்பை மெல்லென எழுப்பி கேட்டு விட முடியாது,

அப்படி கேட்பது உறக்கத்திற்கு பிடிக்காமல் போய் விடக் கூடும்,மாறி மாறி வருகிற விழிப்பும் உறக்கமுமான பொழுதுகளை விழிப்பை காலைக்கும் உறக் கத்தை இரவுக்கும் என யார் அடையாளப்படுத்திக் கொடுத்தது,

அப்படிப்பார்த்தால் இரவில் இயங்கிறதாய் ஒரு தனி உலகமே இருக்கிறதே, ஒரு சின்ன டீக்கடையில் இருந்து பெரியதான் ஷாப்பிங்மால் வரைக்குமாய்,,,/

அப்படி இருக்கையில் இரவையும் பகலையும் ஓய்விற்கும் இயக்கத்திற்கும் என தனித்தனியாய் ஏன் பிரிக்க வேண்டும் என தர்க்கிறான் நண்பன் ஒருவன் அவசர அவசரமாக./

ஆகவே எந்நிலையில் யார் யார் இருப்பினும் அந்நிலையை அவரவர் சுமந்தே அடையாளம் காட்டி காலை மாலை என பிரிக்கப்பட்டிருக்கிற பொழுதுக்குள் அடைகொண்டு விடவேண்டியதுதான் பஞ்சாரத்தில் அடை கொண்ட கோழி போல/

தூக்கம் தூக்கம் தூக்கம் அது இல்லையேல் ஏக்கம் ஏக்கம் ஏக்கம்,,,,என்பதாய் அடையாளப்பட்டுப்போன மனித மனம் சுமந்து திரிகிற எண்ணங்கள் ஏகப் பட்டதாய் இருக்கிறதுதான் என்கிற எண்ணத்துடன் எழுந்த பொழுது விழிப்பும் தூக்கமாய் சூழ்ந்து கொண்டபொழுதாய் ஆகித் தெரிகிறதுதான்.

என்ன செய்யலாம் இந்நேரமாய் என மிதந்த எண்ணம் மேலோங்க இனி தூங் குவது கடினம் என எழுந்தவன் முகம் கழுவிக்கொண்டு வெளியே போய் பார்த்த பொழுது மென் பனி சுமந்த முன் பனிக்காலப்பொழுதில் பார்க்கும் காட்சிகள் ரம்மியம் கொண்டு தெரிவதாக.

இனி வேண்டாம் உறக்கம் என்கிற எண்ணத்துடன் சட்டையை மாட்டிக் கொ ண்டு இருசக்கர வாகனத்தின் சாவியையும் ஹெல்மெட்டையுமாய் எடுத்துக் கொண்டு கிளம்புகிறான்,

குளிர் காற்று படர்ந்து சாலையில்.உடல் பட்டு சில்லிட்ட குளிருக்கு இதமாய் ஏதாவது ஒரு டீக்கடையோரமாய் நிற்கலாம் என நினைத்தால் டீக்கடைகளை கவனமாய் இன்னும் திறக்காமல் வைத்திருந்தார்கள்.

திறந்திருந்த ஒன்றிரண்டு டீக்கடைகளிலும் கூடஅப்பொழுதான் அடுப்பை பற்ற வைத்துக்கொண்டு இருந்தார்கள்.

சரி இருக்கட்டும்,என சக்கர வாகனத்தின் ஆக்ஸிலேட்டரை திருக்கியவனாய் ஊருக்குள் மெல்லென ஒரு ரவுண்ட் வருகிறான்,

ஆத்துப்பாலத்தின் பக்கமாய் போய் கொண்டிருந்த போது திறந்திருந்த ஒற் றைக் கடையில் டீ சாப்பிட்டு விட்டு திரும்புகிறான்,

இவன் டீ சாப்பிட்ட அந்த டீக்கடையின் ஓரமாய்த்தான் சேவுக்கடை இருக்கி றது, சேவுக்கடை என்றால் அது கடையில்லை,அங்கேயே சேவு மிக்சர்,பக் கோடா இன்னும் இன்னுமாய் காரா பூந்தி இனிப்பு பூந்தி,,,என தயார் செய்து பாக்கெட் போட்டு விற்கிறார்கள்.

இவன் பெரும்பாலுமாய் அங்குதான் சேவு மிக்சர் என ஏதாவது தினங்களில் வாங்கிக் கொள்வதுண்டு,

இன்று மாலை அப்படி வாங்க வேண்டும்.என்கிற நினைவுடன் குடித்த டீக்கு காசு கொடுத்து விட்டு வருகிறான்,டீ நன்றாக இருக்கிறது என கடைக்காரரி டம் சொல்லிவிட்டு/

கடைக்காரரும் சொல்லுவார் சிரிப்பு கலந்து,”நீங்க ஒருத்தர்தான் சார்,குடிச்ச டீ நல்லாயிருக்குன்னு காசு குடுத்துட்டுப்போறீங்க, வேறயாரும் டீ நல்லா இருந் தாக் கூட சொல்றதில்ல,

அப்பிடி சொல்றது அவுங் களுக்கு கௌரவப் பிரச்சனையா இருக்குமோ என்ன ன்னு தெரியல, அவுங்களும் சொல்றதில்லை, நாங்களும் அவுங்களப்போல இருக்குறவுங்க சொல்லணும்ன்னு எதிர்பாக்க மாட்டோம்.சில பேருக்கு சொல் லணுமுன்னு மனசு இருக்கும்,ஏதோ ஒரு ஞாபகத்துல சொல்லாம போயிரு வாங்க,மறு நா டீக்குடிக்க வரும்போது சொல்லுவாங்க,நேத்து குடிச்ச டீ ரொம்ப நல்லா இருந்துச்சின்னு, அவுங்களோ இல்ல நீங்களோ அப்பிடி சொல் றதுனாலநாங்கநல்லாவோ நல்லாயில்லாமையோ டீப்போட்டுற போறதில்ல. என்ன நீங்க சொல்ற சொல்லு மனசுக்கு கொஞ்சம் உற்சாகமா இருக்கும், ஒடம்புக்குள்ள ஒரு புத்துணர்வு புகுந்து பொறப்பட்டது போல இருக்கும் அவ்வ ளவுதான் எனச் சொன்ன டீக் கடைகாரரின் பேச்சை கேட்டு விட்டு வீடு திரும் புகிற வேளை பொழுது விடிந்திருந்தது,

வீட்டின் அருகிலிருந்த மரத்தில் வேப்பம்பூக்கள் மலர்ந்திருந்தன, பூச்சிகளும் புழுக்களும் கூட விழித்திருந்தன.கூடவே மனிதர்களும் மண்ணும் அக மகிழ் ந்து முகம் பூத்திருந்ததாய் பட்டது.

தெருமுழுக்கவுமாய் முளைத்துத் தெரிந்த கோலங்கள்புள்ளிகலையும் கோடு களையும் சுமந்து தெருவை அழகாக்கியும் ரம்யப்படுத்தியுமாய் காண்பித்தது,

மிகுந்து பட்ட அழகும் ரம்யமும் மனித மனதையும் மனிதத்தையும் வளப் படு த்தட்டும் என்கிற நினைவுடனாய் வீட்டிற்குள் நுழைந்த பொழுது புத்தாண்டு பிறந்திருந்திருந்தது,

அனைவைருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

சிறக்கட்டும்     2018

7 comments:

Unknown said...

புத்தாண்டு வாழ்த்துகள்!

கரந்தை ஜெயக்குமார் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
தம+1

vimalanperali said...

நன்றியும் அன்புமாய்!

வெங்கட் நாகராஜ் said...

புத்தாண்டு வாழ்த்துகள்.

vimalanperali said...

அன்பும் நன்றியும்,,,,/

Yarlpavanan said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

vimalanperali said...

அன்பும்பிரியமும்!