29 Sept 2017

வைத்த புள்ளியும் இழுத்த கோடுகளும்,,,,,

இதோ கத்திக் கொண்டிருக்கிறது குட்டிகளாய் இரண்டு நாய்கள்,அது யார் சொல்லிகத்தியது,ஏன் கத்தியது என்பது தெரியவில்லை. சற்று முன் வரை அல்லது அந்த சப்தத்தை கேட்கிற வரை/

சொல்கிறபேச்சைஎதுவும்கேட்காமலோஇல்லை தானெடுத்த மூப்பாகவோ,, ம்,,,ஊம்,ம்,,,,ஊம்,,,ம்,,,,ஊம்,,,எனஇடைவிடாமல்கத்திக்கொண்டிருந்தது. 
என்னடா இதுஏன்இப்படிஇந்நேரம்போய் கத்த வேண்டும், பசியாய் இருக்குமோ இல்லை ஈன்று போட்ட தாயின் பிரிவை தாங்காமல் கத்துமோ தெரியவில் லை சரியாக,,,,/

பசி என்றால் சாப்பாடு வைக்கலாம் ஆனால் அதை நுகர்ந்து தின்னத்தெரியாத அளவிற்கு பச்சையாய் இன்னும் பால் மணம் மாறாமல் இருக்கிற குட்டிகள்.,,,,

சோறு வைத்தால் மட்டும் இல்லை நாய்க்கென வைக்கிற பிஸ்கட் அல்லது வேறுஏதாவதுஒன்றை வைத்தால் கூட சாப்பிடத்தெரியாதது மட்டும் இல்லை, முன்னே இருப்பது என்னவென தெரிந்து கொள்ளத்தெரியாத பச்சைக் குட்டி களாய்,,,,,,,/

இன்னும்கண்முழியாகோழிக்குஞ்சுகளாகவீட்டின்கொல்லைவெளியில்சுற்றித் திரிந்தஅவை இரண்டும் கால் முளைத்த உயிர் பூங்கொத்தாய் நடமாடித் தெரி ந்தன,

மண்கீறி முளைத்து துளிர்த்து இலைவிட்டு கிளை பரப்பி பூவும் பிஞ்சும் காயும் கனியுமாக நிறைந்து நிற்கிற மரமாக இல்லாமல் நிறைந்து மனம் வீசுகிற பூங் கொத்து ஒன்று கொல்லை வெளியில் இருந்தால் அது நகர்ந்தும் மெல்லிய சப்தம் எழுப்பியுமாய் செல்கிற போது வெற்று வெளியை நிறைத்துச் செல்கிற பூங்கொத்து ஒன்று கத்திகொண்டே போவது போல் இருக்கிறது.

அப்படிச்செல்கிற நாய்கள் இரண்டில் ஒன்று இப்பொழுது கத்திக்கொண்டிக்கி றது எதற்காக என்பது தெரியாமலும் சரியாக புடிபடாமலுமாய்/

ஒரு வேளை ஏதாவது விஷப்பூச்சிகள் ஏதும் கடித்திருக்குமோ இல்லை வேறு ஏதாவது பூனை அல்லது பெரிய ஜந்துக்கள் ஏதாவது ஒன்றின் தீரா தொந்த ரவாய் இருக்குமோ,,,,,?

யோசித்தவனாய் பின் பக்கம் கொல்லைக்கு சென்ற போது கரும்புள்ளிகளை அள்ளிஉடல்முழுவதுமாய்அள்ளிச்சுமந்துகொண்டிருந்தநாய்க்குட்டிஒன்று ,,,,,, ம்ஊம்,,,,,ம்,,,ஊம் என கத்திக்கொண்டிருந்தது,

படியை விட்டு இறங்கி கொல்லைக்குப் போகிறான்,பரந்து விரிந்த கொல்லை யின் முன் வாசலாய் நின்ற வேப்பமரத்திலிருந்து காய்த்து கனிந்து தொங்கிய வேப்பம்பழங்கள் மரத்தை நிறைத்துத் தெரிந்தன,

இது வேப்பம் பழ சீசன் போலும்,க்டந்து சென்ற சிறிது தினங்களுக்கு முன்னா ய் பார்த்தபொழுது அப்பொழுதுதான் பூத்தது போல மரம் அடைத்தும் தரை நிறைந்து உதிர்ந்துமாய் தெரிந்தது வேப்பம்பூக்கள்/

அவை கண்முன்னாகவே காய்த்து பழுத்து பழங்களாய் உருவெடுத்து தொங்கு கிற போது பார்க்க அழகாக இருந்தது மரம் நிறைந்தும் நிறை மாசமாய் நிற் கிற கர்ப்பிணி போலவுமாய்,,,,/

மரத்திலிருந்து உதிர்ந்து கிடக்கிற வேப்பம் பழங்களை பொறுக்க ரவி முரு கனின் அம்மா இப்பொழுது கொஞ்ச நாட்களாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

முன்னாடியெல்லாம் ஒரு வேப்பமரத்துல இருந்து உதுர்ற பழங்கள பெறக்கி ஒரு மாசம் போல சேத்து வச்சி காயப்போட்டு வேப்பங்கொட்டைகள வித்தா கணிசமா ஒரு தொகை சேரும் தம்பி,

அது வீட்டுக்கு அரி பருப்பு அரசலவுக்குன்னு எதுக்காவது ஒண்ணுக்கு ஆகும் தம்பி,இப்ப அந்த அளவுக்கு மரங்களல்ல பழங்களும் காய்க்கிறதும் இல்ல, உதிர்றதும் இல்ல,பின்ன எங்கிட்டு அத பெறக்கிக்கொண்டு போயி விலைக்கிப் போட்டு அரிசி பருப்பு அரசலங்குற அளவுக்கு ஆசைபடுறதுக்கு,,,/

என்னமோ வீட்டுல சும்மா இருக்குற கொஞ்ச நேரத்துக்கு என்னத்தையாவது ரெண்டு வேப்பம்பழங்கள பெறக்குவோம்ன்னு வந்து பெறக்கீட்டு போறதுதான் எனச்சொல்கிற ரவி முர்கனின் அம்மா இன்றைக்கு வந்தது போலத் தெரிய வில்லை,

கேட்டால்அவ்வளவுதான்தம்பிமுன்னப்போலஇல்ல,நெனைச்சநேரம் நெனச்ச யெடத்துக்கு போயி வர முடியுறது இல்ல தம்பி, இந்தா தெரு முக்குல இருக் ற கடைக்கிக்கூடபோறதுக்குயோசனையாஇருக்கு,முன்னயெல்லாம் பஜாருக்கு நடந்தே போயி வீட்டுக்கு தேவையான சாமான்கள் வாங்கீட்டு நடந்தே வந்துருவேன் தம்பி/

இப்ப அந்தளவுக்கு முடியாட்டிக்கூட ஏதோ எங்கிட்டாவது நடந்துக்கிட்டேதான் திரியிறேன்.

ஆனா கொஞ்ச நாளாப்பாரு தம்பி எதுவும் முடியாம ரொம்ப முடியாம ஆகிப் போச்சி ஒடம்பு,/அதன் வர முடிய தம்பி என்றாள்/

கொல்லைவெளியின் வாயிலாய் நின்ற வேப்பமரத்தை பார்க்கிற ஒவ்வொரு கணமும் ரவி முருகனின் அம்மா அவர்கள் பேசியபேச்சும் வேப்பம்பழங்களும் ஞாபகத்தின் அடுக்குகளில் வந்து நிற்காமல் இல்லை.

சப்தம்வந்த திசை நோக்கி பார்த்த போது சப்தம்தான்காற்று வெளியில் சுற்றிக் கொண்டிருந்ததே ஒழிய சப்தம் எழுப்பிய நாய் குட்டியை காணவில்லை.

என்னடா இது ஆடியோ மட்டுமே கேட்கிறது ,வீடியோவை காணவில்லை என வருந்தியவனாய் உற்று பார்த்த போது சப்தம் வந்த இடம் கட்டிலுக்குப் பின்னால் இருந்து வந்ததாய் தெரிந்தது.

சுவரோரமாய்சாத்திவைக்கப்பட்டிருந்த கட்டிலுக்குப்பின்னாலிருந்து என புலப் படுகிறது,

சும்மாவேஇருக்காதுஇது.இப்படித்தான்ஏதாவதுஒன்றுசெய்துவிடுகிறது,வீட்டை ஒழுங்குபடுத்தும்போதுவெளியே எடுத்துப்போடப்பட்ட கட்டில் துருவேறிப் போய்க் கிடந்தது,

அதன் இருபக்கமுமாய் அடைத்து வைத்தது போல் இருந்த கடப்பாக்கல் கட் டில் சாத்தி வைக்கப்பட்டிருந்த மறைவை ஒரு தொட்டி போல் ஆக்கி காட்டி யிருந்தது.

அதனுள்ளாக எதுவும் இது போல் உள்ள நாய்க்குட்டிகள் மற்றும் பூனைகள் நுழைந்து விடுகிறது எனநினைத்து மிகவும் நெருக்கமாக கடப்பாக்கல்லை அடைத்து வைத்திருந்தான்.

அதனூடாக தெரிந்த சின்னதான இடைவெளி ஊடாக உள் நுழைந்து போய் விட்டது போலும்.

லேசாக சின்னதான பூங்கொத்து படர்ந்து கிடந்தது போல படுத்திருந்தது. பார் க்க நன்றாகத்தான் இருக்கிறது.

”இப்படிப்படுத்துக்கிடந்துகொண்டுகத்தினால் நாங்கள் என்னவென நினைப்பது, படுத்துக்கிடந்ததும் படர்ந்து கிடந்ததுமாய் இருந்ததுதான் இருந்தாய் பேசாமல் உனது அவஸ்தையை வெளிப்படுத்தாமல் இருந்தாலாவது நான் என் மட்டி லாவது பேசாமல் இருந்திருப்பேன்.ஏன் இப்படியாய் நீயும் அவஸ்தைப்பட்டு என்னையும் இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறாய்,,,,,,?,

”வீட்டில் அப்பொழுதே சொன்னாள்.அது பாட்டுக்கு சிறிது நேரம் கத்திவிட்டு அப்புறமாய் அமர்ந்து விடும்,ஏன் போய் இதற்கு இத்தனை ஆர்பாட்டத்தை வெளிபடுத்துகிறீர்கள்,தூங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பி பேச்சாய் பேசுகி றீர்கள்,வீட்டில் இருக்கிற எதையும் கவனிக்காமல் அது ஒன்றுதான் இப்போ தைக்கு இருக்கிற பிரதான வேலை போல அதை தலையில் தூக்கிக்கொண்டு திரிகிறீர்களே அடுக்குமா இது.’

”வேண்டுமானால் டேய் தம்பி கூடப்போப்பா உனது அப்பாவுடன் என அனுப்பி வைத்த இளைய மகனுடன் என்னமோஏதோ என உன்னைப் பார்க்க வந்தால் நீ என்னடாவென்றால் ஜாலியாக படுத்துக்கிடப்பதுபோல் படுத்துக்கொண்டு என்னைப்போட்டு இந்தப்பாடு படுத்துகிறாய்,ஏன் இந்த வீண் வேலை என அதனுடன் கொஞ்சலாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது வெளியில் வர முடியவில்லை அதனால்/

எப்படி இவ்வளவு சின்னதான இடைவெளிக்குள்ளாக அதனுள் நுழைய முடிந் தது எனத் தெரியவில்லை.

சரி அதற்கான ஆராய்ச்சிக்கு இப்பொழுது நேரமில்லை, எப்படியோ நுழைந்து விட்டது,முதலில் அதை வெளியில் கொண்டுவர வேண்டும்எனநினைத்தவ னாய் கட்டிலை முன்பக்கமாக சாய்த்து இழுத்துப் பிடித்துக் கொண்டுஇளைய மகனைநாய்க்குட்டியைஇழுத்துவெளியே விடச்சொன்னான்.

அவன் கொஞ்சம் சங்கடப்பட்டவனாய் கையைக்கொண்டுபோன போதுஅதன் ஆபத்தைஉணர்ந்தவனாய் வேண்டாம் இப்போதைக்கு அதை ஒன்றும் செய்யா மல் விட்டு விடு,கொஞ்சம் தண்ணீர் மட்டும் மோந்து கொண்டு வா,லேசாக மேலே ஊற்றினால் போய் விடும் எனச் சொன்னது அதன் காதுக்கு கேட்டு விட்டது போல் எண் சாணுக்கு உடலை குறுக்கி வெளியே வந்து விடுகிறது.

நேற்று இரவு பணிரெண்டு மணியிருக்கலாம்,இப்படித்தான் கத்திக் கொண்டி ருந்தது,

எந்நேரத்திலிருந்துஅப்படிக்கத்திக்கொண்டிருந்ததுஇல்லைகத்திக்கொண்டிருந்தி ருக்கும்என்பதுதெரியவில்லை,தூக்கத்திலிருந்துபாத்ரூம்போவதற்காகஎழுந்தவன் சப்தத்தை கேட்டு திடுக்கிட்டவனாய் இளைய மகனை எழுப்ப நினைத்து வேண்டாம் என நினைத்தவனாய் மனைவியை எழுப்பினான்,

இளைய மகனைதூக்கத்திலிருந்துஎழுப்பினால்அவ்வளவு கோபம் வருகிறது, ”தூக்கத்துலஇருந்துஎழுப்பாதீங்க,முழிச்சிக்குறப்பஎன்னவேல வேணுமுன்னா லும்சொல்லுங்கசெஞ்சிகுடுக்குறேன்,பஜாருக்குப்போயிட்டுவரணுமாசொல்லு ங்க போயிட்டுவர்றேன்.இல்ல வேற எங்கயாவது கடைக்கி போயிட்டு வரணு மா, சொல்லுங்க போயிட்டு வர்றேன் என்பான்,

அவன்வயதுபையன்கள்காலையில்சைக்கிள்எடுத்துக்கொண்டுபோய்தட்டைப் பேட்டையில் போய் தட்டை வாங்கிக்கொண்டு வந்து விடுகிறார்கள்.

அது மட்டும் இல்லை அதிகாலை நேரமாய் மார்க்கெட்டிற்குப் போய் கீரைக் கட்டுவாங்கிவந்து விடுகிறார்கள் . இன்னும் சில பைன்களானால் பாஜாருக்குப் போய் வீட்டிற்கு தேவையான சாமான்களை வாங்கி வந்து விடுகிறார்கள்.என இவன் அறிந்த தினத்திலிருந்து கை கால் முளைத்த பட்டாம் பூச்சியை போல ஓரிடத்தில் நில்லாமல் பறந்து வருகிறான்,

அத ஏன் கேக்குறீங்க,கொஞ்ச நேரம் கெடைச்சா போதும்,சைக்கிள எடுத்துட்டு எங்கிட்டாவது கெளம்பீருறான்.கடை கண்ணி இல்லை பிரண்ட்ஸ்க வீடுன்னு எங்கிட்டாவது போயிக்கிட்டுதான் இருக்கான்.ஏதாவது சொல்லி வீட்டுக்குள்ள மொடக்கீறக்கூடாது வளர்ற பையனன்னு நானும் ஒண்ணும் சொல்றதில்ல பெரிசா,,,,,,எனநண்பர்சொன்னதிலிருந்துஇவனும்கொஞ்சம்பையனை அப்படித் தான் கட்டவிழ்த்து விட வேண்டும் போலிருக்கிறது போல் நினைத்தான்.

வைத்துவிட்ட நம்பிக்கைக்கு எந்த பங்கமும் வந்துவிடாமல் நடந்து கொள்ளக் கூடியவன்தான்.

ஆனாலும்கொஞ்சம்மனம்பதைபதைக்கிறதுதான்அப்படியாய் அனுப்பும் போது என்றாலும் கூட அனுப்பலாம் நம்பி என்கிற உத்வேகத்தில்தான் அனுப்புகிறா ன்,

கைகால் முளைத்த பட்டாம் பூச்சியை சிறகுகள் விரித்து பறக்க அனுமதிக்கி றான். அது நடக்கிறது ,பின் பறக்கிறது,பின் ஓரிடத்தில் அமர்ந்து நிதானித்து எழுந்து நடந்து பின் தவ்வி தவ்விச்சென்று பின் வேகமெடுத்துப்பறக்கிறது போல்,,,,,,காணப்படுவான்.

அந்த வேகம் இப்பொழுது நல்லதா கெட்டதா எனத்தெரியாவிட்டாலும் கூட அனுமதிப்போம் என்கிற மனோ நிலைக்கு தவ்வியவானாகிப் போகிறான், கூட வே அனுமதிக்கிறவனாகியும் ஆகிபோகிறான்.

கால் நீட்டிப்படுத்துகிடந்த நாய் செந்நிறம் போர்த்தி காணப்பட்டதாய். காணப் பட்ட நாய் எந்நிறம் கொண்டுஇருந்தால் என்ன?

இந்நிறம் நன்றாக இருக்கிறது என சொல்லிவிட்டும் பார்த்தும் விட்டும் போக வேண்டியதும் பார்த்து ரசிக்க வேண்டியதும்தானே,?ஏன் தேவை இல்லாமல் போய் மனதை போட்டு உழப்பிக்கொள்ளவேண்டும்,,?

நீங்கள் ஒன்று சொல்ல நான் ஒன்று சொல்ல,,,,,,என மாத்தி மாத்தி சொல்லி கலர் இது தான் என அறுதியிட்டு சொல்ல வேண்டிய நிலை இல்லாமல் இது தான் என் கலர் என முன் அறிவித்து படுத்திருந்தது,

நீட்டிய கால்கள் நான்காக இருக்கதலையையும் உடலையும் எண் சாணுக்குக் குறுக்கிப்படுத்திருந்தது,

கடந்துசென்ற சில நாட்களுக்கு முன்புவரை அதை இங்கு பார்த்ததாய் யாரும் பதிவுசெய்யவோஇல்லைதகவல்சொல்லவோஇல்லை,தகவல்அறிந்தவட்டார
ங்களும் அதை உறுதி செய்யவில்லை.

ஒருவாரத்திற்குமுன்பு தான்தற்செயலாய்பார்த்தான்,குட்டிகுலுமான்களுடன்/  கறும்புள்ளிகள் உடல் முழுவதுமாய் ஆங்காங்கே விரவிக்கிடக்க எடுத்த உடல் மொழியையும்தப்படிகளையும் அடையாளம் காட்டிச்சென்றன.

அப்படியாய் அடையாளம் காட்டிச்சென்றவை குட்டி போடுவதற்காய் வீட்டரு காய் தஞ்சம் புகுந்திருக்கிறது .

தஞ்சம் அடைந்ததுதான் அடைந்தது இதைவிட நல்ல வீட்டின் பின் புறமாய் பார்த்து தஞ்சம் கொண்டிருக்கலாமே,,,,?இப்படியா வந்து கோளாறும் முன் யோசனையும் இல்லாமல் அழுக்கடைந்த சந்தில் வந்து படுத்துக் கிடப்பது, குட்டிகளைஈன்றேடுத்துசிரமம்கொள்வது,அடக்கண்றாவியே,,,,,

அதுகுட்டிகளை ஈன்றெடுத்த சந்து காரை மண்ணும் செங்கலும் சிமிண்டுமாய் கொட்டபட்டு அடர்த்தியான மோன நிலை கொண்ட ஒன்றாயும்,அழுக்கான சீரற்ற மண் மேடாயுமாய் இருக்கிறது,

அதை சமமாக்கி படுத்துக்கொண்டு குட்டிகளை ஈன்றெடுத்து முழு மனம் காட்டி வெளியேறி வந்து இங்கு சமன் கொள்வது சிரமம் சுமந்த காரியமாய் உருக்கொண்டு தெரிகையில் அங்கு போய் எப்படி குட்டிகளை பாதுகாப்புடன் ஈன்றேடுத்தது எனத்தெரியவில்லை சரியாக,,,/

யாராவது அது பற்றிய தகவல் அறிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள். எனக் கேட்டு விடத் தோணுகிற ஒன்றாய் அதன் ஈன்றெடுப்பையும் குட்டிகளின் பிறப்பெடுப்பையும் பார்க்கும் பொழுது கேட்டு விடதோணுகிறதுதான்,

அத்துவான பரப்பு வெளியெங்கும் எல்லைகளற்று பரந்து விரிந்திருக்கிற தெருக்களெங்குமாய் ஓடித்திரிகிற இவைகளில் இணை எதுவெனவும் அதில் எதற்கு இது தன் குட்டிகளை ஈன்றதெனவுமாய் அறியாத மனதுடன் தாய் நாயையும் அது ஈன்றெடுத்த குட்டிகளையும் பார்க்கும் பொழுது அது என்ன தான் கேட்டுவிடப்போகிறது பெரிதாய் என யோசிக்க தோணுகிறது,

வாஸ்தவம்தான் அது என்ன அப்படி கேட்டுவிடும் பசிக்கிற வயிற்றுக்கு அகல விரித்த உள்ளங் கையில் இறுகப்பிடித்த ஒரு கவளம் சோறன்றி வேறு என்ன கேட்டு விடப் போகிறது பிரமாதமாய்/

அரிசி விக்கிற வெலையில இதுக்குன்னு தெனமும் வடிச்சி கொட்டீட்டு இருக் க முடியுமா சொல்லுங்க,,,,எப்பிடியோ மீந்து போகுது சோறும் கொழம்பும் வெஞ்சனமும், அத இதுக்குதான் தவறாம வைக்கிறேன்,

நான் எப்பயுமே அப்பிடித்தான் மீந்து போனத வேஸ்டா கீழ போட மாட்டேன், இப்பிடி எதாவது ஒண்ணுக்கு பிரயோஜனப்படுற மாதிரி செஞ்சிக்குவேன், என்பாள்  இவன் மனைவி.

இந்த நாயி வர்றதுக்கு முன்னாடி பக்கத்துத்தெரு நாயி ஒண்ணு இங்கன சுத்திக்கிட்டுதிரியும்,அதுக்குவைப்பேன்,இப்பஇதுக்கு,வைக்கிறேன்,

”அந்த நாயி என்னடான்னா பக்கத்துத்தெருவுன்னு மட்டும் இல்லாம ஊரு உலகம் பூராம் சுத்தி வரும் போல இருக்கு, நானே அத கடைக்கிப்போகும் போது நெறைய யெடங்கள்ல பாத்துருக்கேன்.சோறு கண்ட யெடம் சொர்க்க முன்னு திரியிற வகையறா போலயிருக்கு,,,,,”என கண்ணடிப்பாள் இவனைப் பார்த்து/

இவனும் பதிலுக்கு ”என்ன ஜாடைப்பேச்சு எங்கிட்டோ வூடு கட்டி கூட்டீட்டுப் போகுதே என்கிற கிண்டலுக்கு பதில் சொல்லமாட்டாள்,அப்படியே சொன் னாலும் கூட இப்ப என்ன ஒங்க கூட்டத்த மட்டுமா சொல்றாங்க,எங்க கூட்டத் துலயும் ஆளு ரெடியா இருக்கு அதுக்கு,,,/ அத விட்டுப்போட்டு,,,,,,,,ஒங்கள மட்டும் சொல்றதா நெனைச்சா எப்பிடி” என புள்ளி வைப்பாள்.

வைத்த புள்ளியும் அதைச்சுற்றி இழுத்த கோடுகளும் பலவாய் இருக்க அதில் பட்டுத்தெரிந்த வண்ணங்களை இனம் காணுகிற இடமாய் இது இருக்கும் என சொல்கிறாள் மனைவி.

இருக்கட்டுமே இனம் கண்டு விட்டு போவோம்.என்கிற சமாதானத்துடன் கை விட்டுச் செல்கிறான்.போகையிலும் வருகையிலுமாய்/

படுத்துக்கிடக்கிற செந்நிற நாய் பரிதாபம் காட்டிப்பார்க்கிற பார்க்கிற பார்வை மனம் ஊடுருவுதாயும் மிகவும் பரிதாபம் சுமந்து காணப்படுகிறதாயும்,,,/

அந்த பரிதாபத்திலும் அதன் பார்வையிலுமாய் மித மிஞ்சிய ஒரு கெஞ்சல் தெரிவதுபோல்இருக்கிறதுதான்அதைபார்க்கிற ஒவ்வொரு கனம் தோறுமாய்/

இவன் அதை உற்று நோக்குகிற பொழுது அது இவனை நோக்கி கேட்பதாயும் இரைஞ்சுவதாயும் தெரிகிறது.

என்ன கேட்டு விடப் போகிறோம் உங்களிடம் பெரிதாக,நன்றாக இருந்தால் அகல விரித்த கையில் இறுகப் பிடித்த ஒருகவளம் சோற்றை தவிர,,,,,என்கிற சொல்முன் வைப்புடன் அது என்னை அன்றாடம் பார்ப்பதாயும், உடல் முழுவ துமாய் கறும்புள்ளிகள் சுமந்த அதன் குட்டிகள் இரண்டும் கால் முளைத்த பூங்கொத்தாய்நகர்ந்துதிரிவதுபோலவும்பூங்கொத்தின்முனைகளில் இலைகள் துளிர்த்து காணப்பட்டது போலவும் நகர்ந்து திரிகிற பூங்கொத்தின் உடலிலிரு ந்து பூக்கள் எதுவும் கழன்று விழுந்து காணாமல் போய் விடுமோ எனவுமாய் கவனித்தும்கண்காணித்துக்கொண்டுமாய்இருக்கவேண்டி இருக்கிறது வீட்டை விட்டு செல்கிற போதும் வீட்டிற்குள்ளாய் நுழைகிற போதுமாய்,,,,/

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே
அருமை
தம +1

Nagendra Bharathi said...

அருமை

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார். நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக!

vimalanperali said...

வணக்கம் நாகேந்திர பாரதி சார்,நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக,,,,,,!

PUTHIYAMAADHAVI said...

கதை ஓட்டம் அருமை

vimalanperali said...

வணக்கம் மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக,,/