25 Aug 2017

ரோஸ்மில்க்,,,,,,,

ரோஸ்மில்க்குடிக்கஆசைபட்டுடீக்குடித்துவிட்டுவந்தநாளின்நகர்வு அன்றைய பொழுதாய் இருக்கிறது.

ரோஸ்மில்க்ஒன்றும்இவனுக்குபிடித்தமானபானம்அல்ல,இவனுக்குஎப்பொழுதும் எந்தக்காலச்சூழலிலும்மிகவும்இதமாமாயும் கனம் காட்டியுமாய் மனதுக்குப் பிடித்தது டீ,,,டீ,,,டீயாகவே இருந்திருக்கிறது,

டீக் குடிக்கும் முன்பாக ஒரு டீ,,,டீக்குடித்துக்கொண்டிருக்கும் பொழுது ஒரு டீ,,,,,டீக் குடித்த பின்னாய் ஒரு டீ,,,என்பதே இவனது டீக்குடிக்கிற மந்திரத்தின் சூட்சுமமாயும் இலக்கணமாயும் இருந்திருக்கிறது,

தவிர ஒரு டீ எட்டு ரூபாய், ரோஸ் மில்க் பதினைந்து ரூபாய்,ரோஸ் மில்க் கிறகு கொடுக்கிற ரூபாயில் பாதியை கட் பண்ணி இன்னும் ஒரு ரூபாயை சேர்த்துக் கொடுத்தால் இன் னொரு டீக்குடித்துக்கொள்ளலாம். இல்லையென் றால் ஒரு வடையை சேர்த்தெடுத்துக் கொள்ளலாம்,

வடை என்றால் இங்கு ரொம்பப்பேருக்குப்பிடித்திருக்கிறது இவனைப்போல என்பது டீக்கடைக்களைப் பார்த்தாலே தெரிகிறது.

வட்ட வடிவமாய் அகல வாய்திறந்த வடைச்சட்டிக்குள்ளாய் கொதிக்கிற எண் ணெய்யில்போட்டெடுக்கிறவிதமானவடைகளின்மீதுஇவனுக்குஎப்பொழுதுமே ஒருகண் இருந்ததுண்டுதான்,இவனுக்கெனஇல்லைஎன்பது ஆழந்து பார்த்தால் தான் தெரிகிறது.

சிலரானால்கடையின் முன்னாய் வளைத்தடைத்து நின்றுகொண்டதைப் போல் நின்றுகொண்டுஇரண்டுவடைகளைஒருபிளாஸ்டிக்தட்டில்வாங்கிவைத்துக்கொண்டு சட்னியுடனும் சாம்பாருடனும் குழைத்து சாப்பிட்டு விட்டு ஒரு டீயை இளம் மற்றும் கடும் சூடு கலந்து சாப்பிட்டு விட்டு போய் விரைந்து கொண்டிருக்கிற வடை மற்றும் டீக்குடிமக்கள் முன் இவன் சாப்பிடுகிற வடை யெல்லாம் ரொம்பவும் சர்வசாதாரணம்,

பருப்பு வடையில் ஒன்று ,உளுந்த வடையில் இன்னொன்று,போண்டா வடையில் ஒன்று கீரை வடையில் ஒன்று,காய்கறி வடையில் ஒன்று,கேப்பை வடையில் ஒன்று என,,,இன்னும் இன்னுமாய் ரகங்களில் விதம் காட்டி சுட்டெடுத்து அடுக்கிவைத்திருக்கிற வடைகளை எடுக்கச் நினைக்கிற போது அதுதாண்டி அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற சோமாஸ் அதிரசம் எப்பொழுதா வது பாக்கெட்டுடன் இருக்கும் பன்,என கலந்து கட்டி இருக்கிற கடைகளுக்குச் செல்கிற பொழுது இவனது சாய்ஸ் எப்பொழுதும் பன் மற்றும் ஒரு சூடான டீயாகவே இருந்திக்கிறது,

என்ன சப்தம் இந்த நேரம்,,,,,,,,என ஆரம்பித்து லயம்கலந்து ஓடுகிற சினிமா பாடல்களை எப்பொழுதும் ஒலிக்கிற டீகடை இவனளவில்நன்றாகவே இருந் திருக்கிறது.

சிப்பி இருக்குது,முத்தும் இருக்குது,,,,, லாலி,,,, லாலி,,,, லாலி,,,, லாலி,,,,மற்றும் காற்றில்எந்தன் கீதம்,,,,ஆசைய காத்துல தூது விட்டேன்,,,போன்ற பாடல்க ளும் இன்னும்இன்னுமான பிற மனம் அள்ளுகிற பாடல்களுமாய் இவனை அந்தப் பாடல்கள் பாடுகிற டீக்கடைப்பக்கமாய் இழுத்துக் கொண்டு போனது ண்டு.

அதுபோலானபாடல்கள்குறிப்பாக சில கடைகளில்தான் பாடும் என்பதில்லை, வரிசையாகவோ அல்லது கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டோ நகருக்குள் காணக்கிடைக்கிற டீக்கடைகளில் முதலாவதாய் ஒரு கடையில் கேட்ட பாடலின் தொடர்ச்சியையோ அல்லது முடிவையோ கடந்து போகிற ஏதாவது ஒரு கடையில் கேட்கலாம்,

அலமேலு அக்காதான் சொல்லுவாள் இவனுடன் சைக்கிளில் பஜாருக்கு வருகிற சமயங்களில்,டேய் இது போல பாட்டுகள கேக்க நல்லா இருக்குடா,

எங்க வீட்ல வீட்டோட மல்லுக்கட்டவே நேரம் சரியாப் போகுது,அது போக புள்ளைங்க,வீட்டுப் பாடு,அது இதுன்னு இருக்குற ஆயிரத்துக்கு மத்தியில இப்பிடியா வெளியில வரும் போதும் இப்பிடியான பாட்டு கேட்குறப்பயும் மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா என்பாள்.

ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய் இரண்டு பிள்ளைகள் பையனுக்கு சரியாக படிப்பு வரவில்லை என அவனாகவே விரும்பி எடுத்து ஒரு வேலைக்குப் போய் விட்டான்.

சென்னைப்பக்கம்,நிரந்தரமானவேலை,நிரந்தரமானஇடம்எனஒன்றும்இல்லை. இன்றுஇங்கு,நாளைவேறொருஇடம்,,,,கேட்டால்,பலவேலை பலஅனுபவம்பல முகங்கள், பலநேரங்களில்பலஇடம் என்பான்,

“இப்போ எனக்கென்ன குறைச்சல் என்பான், கை நிறைய சம்பாதிக்கிறேன். நல்லா சாப்பிடுறேன்,நல்ல யெடத்டுல தங்கியிருக்கேன்,போனஆறு மாசத்து க்கு முன்னாடி ஒரு பலசரக்க்குக்கடையில இருந்தேன்,அப்புறமா இப்ப ஒரு ஆஸ்பத்திரியில இருக்கேன்,அதுக்கு முன்னாடி ஒரு ஜவுளிக்கடையில, அதுக் கும்முன்னாடி ஒரு பெட்ரோல் பங்குல,,,,,இப்பிடி நெலையில்லாம ஒவ்வொரு யெடமாவேலையின்னுஇருந்தாலும்நல்லாத்தான் இருக்கேன் இப்போதைக்கு, மனநிறைவாவும்இருக்கேன்னுதோணுதுஎனக்கு.இதவிடவேறென்ன வேணும் சொல்லுங்க” என்பான்.ஒரு யெடத்துல நெலைச்சி இருக்க வேண்டியதுதான என்கிற பேச்சிற்கு,,,/

”பெண்பிள்ளைபத்தாவதுகல்லூரியின்இளங்கலைவகுப்பில்இரண்டாம்ஆண்டு படிக்கிறாள். என்னம்மா என்ன இது ஏன் இப்பிடியெல்லாம் பண்ணீட்டு வர்ற ,வீண்வம்ப ஏன் வெலைக்கு வாங்குற என அவளது அம்மா ஒரு தடவை கேட்ட பொழுது பின்ன ஏன்கிட்ட வம்பு இழுத்துக்கிட்டே இருக்குறவனப் பாத் துட்டு சும்மா இருக்கச் சொல்றயா,

”காலேஜ்லஏங்கூடத்தான்படிக்கிறான்,பசங்க பொண்ணுங்க எல்லாம் ஒண்ணா ஒக்காந்துதான்சாப்புடுவோம்.நாங்கபொம்பளப்பசங்க கொண்டாந்தத ஆம்பளப் பசங்களுக்குக்குடுப்போம்,ஆம்பளப்பசங்ககொண்டாந்ததபொம்பளபசங்கவாங்கிக் கிட்டு சேர்ப்பண்ணிதான் சாப்பிடுவோம்.

அப்படிஒத்துமையாஇருக்குறததப்பாநெனைச்சிட்டான்அவன்,பழகுறபழக்கத்துல கள்ளம் தெரிஞ்சப்ப அக்கம் பக்கம் இருக்குற பசங்கிட்டயும் பொண்ணுங்க கிட்டயும் சொன்னேன்,

அவுங்க சொல்லிப்பாத்தும் கேக்காம வேணுமென்னே அப்பிடித்தான் செய்வே ன்ங்குறது மாதிரி இருந்தப்பத்தான்போனப்பாதான் ஒரு நா தப்பான எண்ணத் தோட நெருங்கி வந்தவன செருப்பக்கழட்டி அடிச்சிட்டேன்,இதப்போயிஎப்பிடி தப்புன்னுசொல்றீங்க,சொல்லுங்க,அன்னக்கிஅவனஅப்பிடிச்செய்யாமா விட்டு ருந்தேன்னு வையிங்க,இன்னைக்கி நான் அந்த காலேஜில படிக்க முடியாது, ஏங்கூடப்படிக்கிற பசங்களுக்கு இருக்கிற தைரியம் கூட ஒங்களுக்கு இல்லை யே” என்பாள் தாய் தந்தையைப்பார்த்து/

ஒரு நாளில் அவள் படிக்கிற கல்லூரியில் போய் விசாரித்த பொழுதான் பிரச் சனையின் தீவிரமும் அவள் அப்ப்டி செய்ததினால் கல்லூரியில் இருக்கிற பெண் பிள்ளைகள் கொஞ்சம் கூடுதல் தைரியம் பெற்று இருப்பதாகவும் இதே போல பிரச்சனையில் பாதிக்கப்பட்டு படிப்பே இனி வேண்டாம் என ஒதுங்கி இருந்த மாணவி அதற்கப்புறமாய் கல்லூரிக்கு வருவதாகவும் கல்லூரி முதல்வர் சொன்ன போது அவளின் பெற்றோர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. தவிர சம்பந்தப்பட்ட அந்தப்பையன் இப்பொழுது கல்லூரியில் படிக்கவில்லை என்பதுகூடுதல் சந்தோஷமாகவும் ஆகிப்போகிறது பெற்றோர் களுக்கு/

ஆனாலும்அவளதுகல்லூரிப்படிப்புதொடர்ந்துகொண்டிருக்கிறநாட்களில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கிற வேலையிலும் தீவிரமாய் இருந்தாள். இவனுடன் சைக்கிளில் வருகிற நாட்களில் சொல்லுவாள்.

“ஒனக்குதெரிஞ்சயெடத்துலமாப்புளஇருந்தசொல்லுடா,நல்லயெடமாஇருந்தா முடிப்போம்”என்பாள்.இவனுக்குத் தான் கொஞ்சம் வெக்கமாகப் போய் விடும். என்ன இது நான் ஒரு பெரிய ஆள் என நினைத்து என்னிடம் போய் மாப்பிள் ளை பார்க்கச்சொல்கிறார்கள்,என/

இவன் நினைக்கிற மறுகணம் அந்த நினைவின் நுனி பற்றி நெசவிடும் தொட ர்ச்சியாக ”என்ன இது சின்னப்பையன்கிட்டப்போயி இதெல்லாம் சொல்றாங்க ளேன்னு நெனைக்கிறயா,நீதான் பெரிய ஆளா இருக்கயேப்பா,வயசுதான் சிறுசு ஒனக்கு ஆனா நீயீ இருக்கிற ஒசரம் பெருன்னு நான் நெனைக்கிறேன்ப்பா ஆமா,அதுனாலத் தான் நான் ஓங்கிட்ட சொன்னேன் ,இல்லைன்னா சொல்லீ ருக்கமாட்டேன், ஓங்கூடச்சேந்துஎத்தனை பேரு சுத்துறாங்க அவங்ககிட்டயெ ல்லாம் சொல்லத் தெரியாமையா,,,,,,நீயி என்னதா கட்சி ,கொடி,பொதுக் கூட்ட ம்ன்னு அவுங்ககூட அலைஞ்சாலும் ஓந்தன்ம வேறப்பா,அவுங்க தன்ம வேற ப்பா,ஒனக்குஇருக்குறபெருந்தன்மையும்,நிதானமும்அவுங்ககிட்டகெடையாது.” அதுனாலத்தான் அவுங் கள விட்டுட்டு ஓங்கிட்ட சொன்னேன்.என்பாள்,

இவனுக்கு அந்தப்பேச்சை கேட்கிறநாட்களில்ஒருவித கூச்சமாய் இருந்தாலும் சரி இந்த நம்பிக்கைக்காகவே முயன்று பார்க்கலாம் என நினைப்பான், அவ னது நினைப்பின் ஈரம் காய்ந்து முடிவதற்குள்ளாகவே அந்த அக்காவின் கணவரும் வந்து சொல்லுவார்,ரொம்பவும் கூச்சப்பட்டவராயும் சங்கடப் பட்ட வ ராயும்/

”என்ன மாமா இத சொல்லுறக்கு ஏன்இவ்வள்:அவு கூச்சம்,நீங்க என்ன அந்நிய ஆள்கிட்டயாசொல்றீங்க,ஏங்கிட்டதானசொல்லுறீங்க,ஒங்களுக்குஏங்சட்டையப் புடிச்சி சொறல்றதுக்கு முழு உரிமை இருக்கு”எனச்சொல்லும் போது ”இல்ல மாப்புள எனச்சொல்லிவிட்டு அப்பிடி கூப்புடலாமுல்ல ஒங்கள” எனக் கேட்ட வராய் தொடர்வார்,”இல்ல மாப்புள என்னோட அனுபவம்தான் ஒங்க வயசு அப்பிடின்னு இருந்தாலும் கூட நானெல்லாம் ஒங்க வயசுல இருக்கும் போது இவ்வளவு வெளி ஆட்க பழக்கம்,நாலு பொது யெடத்துக்கு நாலு பிரச்சனை க்காக போறது,நாலு பேறப்பாக்குறது,பேசுறது மாதிரியான மத்த ,மத்த பழக்க முன்னு எனக்கு ஒண்ணும் தெரியாது,தவிர ஓன் வயசுலயெல்லாம் எனக்கு கல்யாணம் ஆகி ஒரு புள்ளை கையில இருக்கு,

“ரெட்டப்படைவயசுலகல்யாணம்பண்ணிவைக்கக்கூடாதுங்குறதுக்காகஒத்தப் படை வயசான இருபத்தி மூணு வயசுலயே கல்யாணம் பண்ணி வச்சிட்டா ங்கஎனக்கு இருபத்து மூணுன்னா ஒங்க அக்காவுக்கு என்ன வயசுன்னு பாத்து க்க,பத்தொம்பதுவயசுலவெளைஞ்சி நின்ன கருதாட்டமா நின்னா, கல்யாணம் கட்டி வச்சிட்டாங்க,இங்க டவுனுக்கு குடி வந்துட்டம் வாடகை வீடு பாத்து,

”அவளுக்கு என்னைய விடவயசுதா கூட கொறவே தவிர மன தைரியமும் பேச்சும் ஜாஸ்தி. தண்ணி குடியாம ஒருமணி நேரம் கூட ஒரு ஆள் கூட பேசச் சொன்ன பேசுவா,

”அவதான் வாடகை வீடு பாத்தப்ப வாடகை அட்வான்ஸ் பேசி குடுத்தா வீட்டு ஓனர் கிட்ட,அவதான் வீட்டு சாவியையும் வாங்குனா அவதான் குடியேறுன தும் பால்காய்ச்சி சுத்தியிருக்குற பத்து வீட்டுக்கும் குடுத்து பந்தம் வளத்தா, அந்த பந்தத்தோட நெழல்லதான் நான் இப்ப வரைக்கும் ஒதுக்கியிருந்துக் கிட்டும் வேலைக்கு மில்லுக்கு போயி வந்துக்கிட்டுமா இருக்கேன்.

சம்பளத்தவாங்குன அன்னைக்கி அவ கையில குடுக்குறதோடசரி,டெய்லி அவ தான்எனக்குஇவ்வளவுசெலவுக்குன்னுஎடுத்து குடுப்பா,நானும் வாங்கீட்டுப் போவேன்,

அதுக்காகரொம்பகஞ்சத்தனமெல்லாம்பண்ணமாட்டா,என்னகேக்குறேனோஅத
க்குடுப்பா,வீட்ல இதுது இந்த மாதிரி இருக்கு கொஞ்சம் கவனத்துல வச்சிக் கிட்டு செலவழிங் கன்னு வா,நானும் அதுக்குத்தகுந்தாப்புல பேயிக்குருவேன்,

புள்ளைங்களும்பெரிசாதிண்பண்டம்,சினிமாதுணி மணின்னு எதுக்கும் பெரிசா ஆசைப்பட்டதில்ல,காலேஜ் படிக்கிற இந்த வயசுல கூட பொம்பளப் புள்ள கிழிஞ்ச துணிய தச்சிப்போட்டுக்கிறுவா,ரொம்ப தேறாது இனி இந்த துணின்னு ஆனதுக்குஅப்புறம்தான்,வேற கேப்பா,சமயத்துல அது கூட எடுத்துக் குடுக்க தேவைஇல்லாத அளவுக்குஅவஅண்ணன்காரன்மெட்ராஸ்ல இருந்து எடுத்துக் கிட்டு வந்துருவான்,அதையும் சந்தோஷமா ஏத்துக்கிருவா,அண்ணன் தங்கச்சி ரெண்டு பேருக்கும் துணி எடுத்து போடுறதுல நல்ல டேஸ்ட் மாப்புள, அவுங்க ரெண்டு பேரும் புது துணி உடுத்திக்கிட்டு நின்னாங்கன்னா புத்தம் புதுசான பூ மரங்க ரெண்டு வீட்டுக்குள்ள புகுந்து நிக்கிற மாதிரி இருக்கும்.

அவன்அண்ணன்வர்றஅன்னைக்கிஏங்வீட்டுக்காரியவும்,மகளையும்கண்டிப்பா ஒரு சினிமாவுக்கு கூட்டீட்டுப்போயிருவான்,டேய் ஏண்டா என்னைய கூப்புட் டுக்கிட்டு போக மாட்டேங்குறீங்கன்னு கேட்டா நீங்கதான் அந்தப்படத்த வந்த அன்னைக்கே பாத்துட்டீங்களாமுல்லன்னுவான்.

“எனக்கு அப்பிடி ஒரு பழக்கம் தம்பி நைட் செகண்ட் ஷோ சினிமா ரொம்ப பாப் பேன்,சமயத்துலமில்லுலஷிப்டுமுடிஞ்சிபோறவன்அப்பிடியேஹோட்டலபோயி சாப்பிட்டுட்டு தியேட்டருக்குள்ள நொழஞ்சிருவேன்.

படம் முடிஞ்சி வெளியில வரும் போது தெறந்திருக்குற டீக்கடையா பாத்து டீக்குடிச்சிட்டு வீட்டுக்குப்போகும் போது ஹோட்டல்கள முடிச்சி அப்பத்தான் பாத்திரம் கழுவி வச்சிக்கிட்டு இருப்பாங்க,

நைட்கடைங்கள சூடா இட்லி வெந்துக்கிட்டு இருக்கும்,என்னைய மாதிரி மில்லுல வேலை பாக்குறவுங்க,அதிகாலை மூணு மணி ஷிப்டுக்காக போயிக் கிட்டு இருப்பாங்க, அதுலநான் வேலை பாக்குற மில்லுலயே வேலை பாக்குற வுங்கபோயிக்கிட்டுஇருப்பாங்க,அப்பிடியே அவுங்களெயெல்லாம், பாத்துக்கிட் டே வீடூ போயி சேருவேன்,

”இப்பிடியெல்லாம் இருந்த எனக்கு இது போல கட்சி,கொடி பொதுக் கூட்டம், பொதுவான சிந்தனையின்னு இல்லாம போச்சி மாப்புள,

“மில்லுல இருந்த யூனியன்ல கூட நான் இருந்ததில்லை.ஆனா எங்க எல்லா ருக்கும்ஒரு பிரச்சனையின்னா அவுங்கதான் வந்து மொத ஆளா நிப்பாங்க, நேத்துவரைக்கும்சிரிச்சி சிரிச்சி பேசிக்கிட்டு எங்களை கசக்கிபிழிஞ்சி வேலை வாங்குறதுல மட்டுமே குறியா இருந்த மில்லு மேனேஜ்மெண்ட் ஆள்க யாரும் பக்கத்துலகூடவரமாட்டாங்க,நாங்கவம்படியாபோயி எங்க பிரச்சனைய சொன் னாலும்கூட காதுகுடுத்துக்கூட கேக்க மாட்டாங்க,வேற ஏதோ வேலை கவனத் துல இருக்க மாதிரி காட்டிக்கிட்டு போயிருவாங்க கார்ல ஏறி”,/

இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருக்குற யூனியன்காரங்க நாங்க போயி சொல்லாட்டி கூட எங்கள கூப்புட்டு வச்சி பேசி எங்க பிரச்சனைக்காக வர் றோம்ன்னு வருவாங்க,அப்பிடியெல்லாம் இருந்த நான் இப்ப ஒங்களையும் ஒங்க பாடுகளையும் பாக்குற பொழுது எனக்கு ஓங்கிட்ட வந்து சகஜமா பேச மனசு கூசித்தான் இப்பிடி ஒதுங்கி ஒதுங்கி வர்றேன் மாப்புள என்பார்,

இவனது வீடு இருக்கும் தெருவில் இருக்கிற அவர்களிடம் எப்பொழுது அவர் களிடம்அக்கா, மாமா முறையில் பழகினான் என்பது இன்னும் சரியாக நினை வில் இல்லை.

இவனது அம்மாவிடம் கேட்டால் நீயி சின்னப்புள்ளையா இருக்குறப்ப என் பாள்,நீயிஎன்னதான் வெள்ளை வேட்டி வெள்ளைச்சட்டை கட்சி,கொடி பொதுக் கூட்டம்ன்னுஅலைஞ்சாலும்கூட அவுங்க அனுபவம்தான் ஓங் வயசு என்பாள், அதுனால அவுங்களப்போல ஆட்கள மதிக்கக்கத்துக்க,அது நீ மேல போறதுக்கு இன்னும் ஒதவும்,அப்பிடி இல்லாட்டி கூட ஒன்னைய பண்படுத்தும் என்பாள்.

அவள் சொன்ன வார்த்தைகளின் அர்த்தமும் அடர்த்தியும் இப்பொழுது புடி படுகிறதாய்//

புடிபடுதலின் உள்ளார்த்தமும் அதன் தாக்கமுமாய் அக்காவை ஏற்றிக் கொண் டு சைக்கிளில் சென்றுகொண்டிருக்கிற நாட்கள் ஒன்றில் கேட்கிற இதுபோலா பாடல்கள் அவள் மனதை இதப்படுத்தி விடுகிறதாய்/அதே இதம் இன்றைக்கும்/

                                                                            பாகம் 2

இதுநாள்வரை ஒரு நாளைக்கு பத்து டீ வரை என்பது மிகவும் சர்வசாதா ரணம்.இனிஎப்படிஎன்பது தெரியவில்லை, வயதும் சூழ்நிலையும் தீர்மானி க்கும் போலிரு க்கிறது எதையும்/

இவனைப்பொறுத்தவரை தீர்மானித்திருக்கிறதெனத்தான் சொல்ல வேண்டும். பாலம் ஏறி இறங்கி விட்டால் ஜேம்ஸ்ராஜ் கடையிலும் ,அது அல்லாது சும்மா இருந்து பஜார் அல்லது ராமமூர்த்தி ரோடுப்பக்கம் சென்று விட்டால் தங்கம் மாள் டீக் கடையிலுமாய் மொத்தம் ஒரு நாளைக்கு பத்துக்கும் மேற்பட்ட டீக்கள் ஓடிவிடும்,

தங்கம்மாள் கடையில்தங்கம்மணி அக்கா போடும் டீயைக் குடிப்பதற்காகவே அந்தக்கடைக்குச் செல்வதுண்டு, முன்னால் டீப்பட்டறை பின்னால் ஒலிக்கிற மனம் பிடித்த சினிமா பாடல்கள்

தங்கமணி அக்கா சொல்லுவாள்,வேலைக்கு சேந்த புதுசுல ரொம்பவும் சங்க டப்பட்டுத்தான் போனேன்,வேலையவிட்டு நின்னுறலாமான்னு நெனைக்கிற அளவுக்கு,அப்புறமும் குடும்பப்பாட்ட நெனக்கும் போது இதெல்லாம் பெரிசா தெரியல,பல்லக்கடிச்சிக்கிட்டு இருந்துட்டேன்.

இப்பவும் விருதாப்பையலுக ரெண்டு பேரு வந்து நெரண்டு இழுப்பான்க,ஒரு தடவையின்னா ஒருதன் மூஞ்சில சுடுதண்ணிய புடிச்சி ஊத்தீட்டேன்,

அதுலயிருந்து பக்கத்துல கூட யாரும் வரமாட்டாங்க,என்ன ஏங்கைபக்குவம், டீ நல்லா அமைஞ்சி போச்சின்னு பேராகிப்போச்சி,அதுனால ஓனர் எனக்கு முழு சுதந்திரம் குடுத்துருக்காரு/என்பாள்.

நண்பன்செல்வம்தான்கூட்டிப்போனான் ஒரு வருடத்திற்கு முன்னாக, ஒரு மழை நாளின் மாலைப் பொழுதாய்/

மழை முடிந்து அடிக்கிற சாரலுக்கு ஒரு டீக்குடித்தால் தேவலாம் போல் இருந்தது,

செல்வத்திடம் சொன்ன போது தங்கமணி அக்க கடைக்கு கூட்டிப்போனான்.

அவர்கள் நின்றிருந்த இடம் கணேசன் வாட்ச் கடைக்கு எதிர்த்தாற் போலிரு க்கிற பெட்டிகடையகத்தான் இருந்தது,

அவ்வளவு சின்னக்கடைக்கு அவ்வளவு பெரிய கீற்றுக்கொட்டகை தேவை யில்லை.கடைக்காரர்தான் சொல்வார்,சார் என்ன நீங்க சொல்றீங்க,நம்ம கடை முன்னாடி வந்து வெயில் மழைக்குன்னு ஜனங்க ஒதுங்கி நின்னா நமக்குத் தான்புண்ணியம்,நம்மயெடம் சார்,இது ஏதோ நம்மளால முடிஞ்சது, அவ்வளவு தான்என்பார்கடைக்காரர்,

கோயில்கொளமுன்னுபோயிதேடுனாலும்கெடைக்காதபுண்ணியம்இப்போதானா வலிய வர்றையில விட்டுரலாமா என்பார்.ஏதோ அவரது கடை வாசலில் புண் ணியம் சேர் போட்டு அமர்ந்திருப்பதைப் போலவும் அந்த புண்ணியம் தாண்டி தான் அவரது கடைக்கு தினசரி வந்து போக வேண்டும் என்பது போலவுமாய் பேசுவார்/

அவரதுகடைக்குஎதிர்த்தாற்ப்போலிருந்த பாலமுருகன் எலெக்ட்ரானிக்ஸில் வேலை பார்த்த அந்த பெண்மீது பக்கத்துத்தெருக்காரனுக்கு ஒரு கண் இருந் தது.

இவன்போகிறவருகிறதருணங்களிலெல்லாம்இவனைப்பார்க்கையில்இவனிடம்தவறாமல்கீரல் விழுந்த ரெக்கார்ட் போல அதே சொல்லைச் சொல் வான்.

அந்தப்பக்கம் போகையில் வருகையில் பழக்கம்.போக இவனது நண்பன் அழகர்ராஜ் குடியிருக்கிற தெருவில்தான் இவனும் இருக்கிறான்.

அழகர்ராஜை சந்திக்க செல்கிற போதெல்லாம் இவன் எதிர்படுவான் வலிய வந்து பேசுவான் சிரிப்பான்,அந்தச்சிரிப்பிற்கும் பேச்சிற்கும் அர்த்தம் இப்பொ ழுதுதான் புரிகிறது.

அந்தப்பெண் வெளியூரில் இருந்து வருகிறாள்.அவள் ஒரு வழியில் அவனது சொந்தம்தான்,ஆனால் கேட்டால் தெரியாது என்று விடுவாள்,ஒருநாள் அந்தப் பெண்ணிற்குசாப்பாடு கொண்டு வந்த கொடுத்த அந்த ஊர்க்காரர் சொன்னார் பையன்ஆசைப்படுறான்வைக்கிறான்ங்குறதெல்லாம் சரிதான்,ஆனா கையில  நெலையான வேலை இல்லையே,

பொண்ணுக்கும் கொஞ்சம் விருப்பம் இருக்கத்தான் செய்யிது,ஆனா அவனு க்கு நெலையான ஒரு வருமானம் இல்லைன்னு தயங்குறா,அவ சொல்றதும் ஞாயம்தான,,,/என்பார் சாப்பாடு கொண்டு வருகிற பெரியவர்,

அவர்வந்து இறங்குகிற சைக்கிளே அவரது வயதை யும் மூப்பையும் சொல்லி விட்டுச்செல்லும்.அவர் சொல்லை காரணம் காட்டி அந்தப் பையனிடம் பேசும் போதுஎனக்கு இன்னும் கொஞ்ச நாளையில வேலை கெடைச்சுரும், தயங்காம குடுக்கச்சொல்லுங்க என்றான்,

முதலில் வேலை கிடைக்கட்டும் ,அப்புறமாக பேசுவோம்,பெண் உனக்காக காத்திருக்கிறேன் எனச்சொல்லியிருக்கிறாள்என அவனிடம் சொன்ன போது இவனுடன் சேர்ந்து டீக்குடிக்க அவனும் தங்கம்மாள் கடைக்கு வந்தான். உடன் செல்வமும் இருந்தான்.

பதினைந்து வருடங்களுக்கு முன்னாய் இதே நாளில்நடந்தஒரு விஷயம் இவனில் எப்படி சரியாக ஞாபகம் வந்தது சரியாக என்பது புரியாமலேயே,,

காலையில்எழுந்தபொழுது கொஞ்சம் தாமதம் காட்டித்தான் எழுந்தான் ,என்ன இது எதற்காக இவ்வளவு நேரமும் இவ்வளவு தொலைவும் தூங்கினோம் என்பது தெரியாமலேயே/

வீட்டில்கேட்டபோதுமனைவியும்மகளும் ஒன்று போல் குரல் கொடுத்தார்கள், அலுப்பு காட்டி தூக்கம் கொண்டிருக்கிற நீங்கள் கொஞ்ச நேரம் அதிகமாக தூங்கினால்தான் என்ன குறைந்து விடபோகிறது என விட்டு விட்டோம்/

நாளெல்லாம்உங்களதுஉழைப்பைஅலுவலகத்திற்கு ஒப்புக்கொடுத்து விட்டும் அங்கு உயரதிகாரியிடமும் இன்னும் இன்னமுமான புரிதலில்லாத சிலரின் நையப்புடைத்தலுக்கும்,புறம்பேசுதலுக்கும்ஆளாகிமனக்கஷ்டத்துடன்அலுத்து களைத்து வருகிற தாங்கள் கொஞ்சம் அசந்து தூங்கி விட்டுப் போகிறார்கள் என விட்டுவிட்டோம் எனச் சொல்லி அவனது பேச்சை அமுக் கி விட்டார்கள்.

காலையில்எழுந்தபோதுபஜாருக்குப்போகவேண்டும்,சாமான்கள்வாங்கவேண்டும்என்கிறஎண்ணமெல்லாம்இல்லை,மனதிற்ள்ளாயும் இவனது திட்ட வரைவிற் குள்ளாகவும்/

திடீரென மலர்ந்து பூத்த கொன்றை மரத்தின் பூக்களைப் போல மனதிற்குள் ளாய் எழுந்த ஆசை பூத்து மலர்கிரதாய்/

பூத்து மலர்ந்த ஆசை கூம்பி இருந்த மலர் ஒன்று தன் இதழ் பிரித்து அழகு காட்டியது போல் இருந்தது.

பஜார் போய் விட்டு திரும்பி வந்த நேரம் மதியம் ஒன்னறை மணியாய் இரு ந்தது,நல்ல பசி வேறு,பசிக்கு ஒரு வடையும் ரோஸ்மில்கும் குடிக்கலாம் என நினைத்து போய் விட்டு வழக்கம் போல டீக்கு சொல்லிவிட்டு வடை எடுத்து சாப்பிடுபவனாய் இருக்கிறான்.

4 comments:

Thulasidharan V Thillaiakathu said...

ரோஸ் மில்க் ரோஸ் மில்க் போல இனிமையாக இருக்கிறது விவரணம்.

vimalanperali said...

வணக்கம் துளசிதரன் சார்,
நன்றிம் அன்பும்/

கரந்தை ஜெயக்குமார் said...

சுவைஅதிகம் நண்பரே
தம 2

vimalanperali said...

வணக்கம் சார்.நன்றியும் அன்பும்!