13 Aug 2017

நிறப்பிரிகைகளாய்,,,,,,

கிளம்பியஇடம்வீடாகவும்கிளம்பிய நேரம் மாலை ஆறரையாகவும் இருந்தது.

கறுப்புக்கலர் பேண்ட்டும் அதற்கு மேட்சாக இல்லாமல் ஏதோ ஒரு வெளிர் கலரில் சட்டையும் போட்டுக்கொள்வது இவனது ட்ரெஸ் கோடாக இருந்தது.

கறுப்பு இல்லையெனில் பிரௌவ்ன்,அதுவும் இல்லையெனில் வெளிக்கலரில் வைத்திருக்கிற ஒரு பேண்ட்,

அதை போலான வெளிர்க்கலர் பேண்ட் அணிகிற நாட்களில் அடர்க்கலரில் டிசைன்தரித்திருக்கிற சட்டையை அணிந்து கொள்வான்.அதுவும் எக்ஸ்பெயரி டேட் கடந்து தாங்கி ஓடிக்கொண்டிருப்பது போல் படுகிறது,

ஆகவே அது கிழிந்து கிழியும் முன்பாக இன்னொரு சட்டை எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்,இவன் எப்பொழுதும் இப்படித்தான்,

ஒரு சட்டை கிழியப்போகிறது,இல்லை அதன் பயன் பாட்டுக்கு வந்து நீண்ட நாள் ஆகப் போகிறது.என்றால் இன்னொரு சட்டை எடுக்க வேண்டும் சீக்கிரம் என குறித்து வைத்துக்கொள்வான்,

பஜார் பக்கமாக போகும் பொழுது அல்லது கையில் காசு இருக்கிற சமயமாய் பார்த்துசட்டையை எடுத்துவைத்துக்கொள்வான்,பின் சமயம் வாய்க்கும் போது அல்லது அந்த சட்டை கிழிந்த பின்னாய் போட்டுக் கொள்வான்.அதான் எடுத்து வந்தாச்சில்ல,போட்டுக்குற வேண்டியதுதான,,, என்றால் இருக்கட்டு மே இப்ப என்ன அதுனால ,அது கிழியட்டும்ன்னு காத்திருக்கேன்,என்பான்,

”ஆமாஅது எப்ப கழிஞ்சி நீங்க எப்ப போட்டுக்குறபோறீங்க,,” என்கிற கேள்விக் கு சிரித்துக்கொள்வான்,கேட்பவர்கள்பதில் சொல்பவர்கள்வேறு வேறானவர் களாய் இருந்த போது இவன் மனம் படக்கென வாரிபோட்டு விடக்கூடும்,

ஆனால் கேட்பவர் இவனது மனைவியாகவும் பதில் சொல்வது இவனாகவும் இருக்கிறபொழுதுஅடவிடுஇப்போஎன்னஎன்பதும்,மெல்லியதாய்படர்கிறசிரிப்பும் தான்இவனின்பதிவாய் இருக்கும்.

சமயத்தில் எடுத்து வைத்ததை ஒரு வருடம் வரை கூட போட மாட்டான், போன வருடம் அக்கா எடுத்துக்கொடுத்த சட்டையை இப்பொழுதான் போட்டி ருக்கிறான்,

இவன் என்னமோ பெரிதாக தமிழ் இலக்கிய உலகில் பெரிதாக சாதிக்கப் போகிறவன்போலவும்அல்லது சாதித்து விட்டது போலவும்இவனது ஆறாவது சிறுகதைநூல் வெளி வந்த போது அக்கா எடுத்துக்கொடுத்த சட்டை,

சட்டைக்கும் இலக்கியத்திற்கும் என்ன சம்பந்தம் இருந்து விட முடியும் எனத் தெரியவில்லை,அதற்கு அந்த விலைக்கு புஸ்தங் கங்கள் ஏதாவது வாங்கிக் குடுத்திருந்துருக்கலாம்,வைத்திரிந்திருப்பான்,

படித்திருப்பான் என்று சொல்வதை விட வைத்திருந்திருப்பான், எனச் சொல் வதே சாலப்பொருத்தமாய் ப்படுகிறது. இப்பொழுது பலபேர் அப்படித்தானே/ புத்தகங்களை ஷெல்பில் அடுக்கி வைத்திருக்கிற அலங்கார பொருட் களாகத் தான் வைத்திருக்கிறார்கள்.அதுபோலதான் இவனும் புத்தகங்களை ஷெல்புக ளற்ற வீட்டில் வைத்திருக்கிறதாய் இவன் மீதே இவனுக்கு கோபமும் வருத்த மும் உண்டு,

புத்தகங்கள்அவ்வளவாகஇல்லாதவீட்டில்புத்தகங்களைஅவ்வளவாகபடிக்காத ஒருவனாய் இவன் இருந்திருக்கிறான் என்கிற வருத்தமும் இவன் மீது இவனு க்கு அவ்வப்பொழுது இல்லாமல்இல்லை.

அப்படியான வருத்தங்களும் கோபமும் இவனை பெரிதாய் ஒன்றும் பாதித் ததில்லை,படியாதவன் என்று வேண்டுமானால் சொல்லிவிட்டு போகட்டுமே. யார் வேண்டாம் எனச்சொன்னார்கள்,என்பது இவனது திண்ணமான எண்ணம்.

இவனது நண்பன் சொல்லுவான் டேய் சும்மாயிரு அடி முட்டாள் மாதிரி பேசாத என ,அது போலான அவனின் அடி முட்டாள் மாதிரி என்கிற பேச்சை இவன் எப்பொழுதும் சீரியஸாக எடுத்துக் கொண்டதில்லை.ஒரு மெல்லிய சிரிப்புடன்தான் கடந்திருக்கிறான்,

ஆனால்ஏதோஒரு நாளன்றின் மாலையில் நண்பர்களாக கூடியிருந்த வேளை யில்அதே அடி முட்டாள் பேச்சு வர இவனுக்கு சுருக்கென்று தைத்து விட்டது, இவன் நான் அடி முட்டாள்தான் கிட்டத்தட்ட இங்கிருக்கிற யாரளவிற்கும் படிக்கவில்லை,இங்கிருக்கிறயாரளவிற்கும்எனக்கு அறிவில்லை, இங்கிருக்கி ருக்கிற யார் போலவும் நான் அரசாங்க வேலையோ தனியார் நிறுவன ஊழி யனாகவோ இருந்து சம்பாதிக்கவில்லை,அப்படியான் புண்ணிய மும் பாக்கிய மும் வாழ்வில் கிடைக்கப்பெறாதவன் நான்,ஆகவே வாழ்வின் முழுமையை இன்னும் அனுபவிக்காமல் இருக்கிறவர்களில் ஒருவனாய் இருக்கும் நான் அடி முட்டாளே,,,,,அடி முட்டாளே என கலங்கித்தான் விட்டான் கொஞ்சமாய்/

அந்த கொஞ்சமாய் அவனுக்குள்ளாய் சமன் பட ரொம்பவும் நாளாகிப்போனது. அதுவரை அந்த நண்பனையோ இல்லை அவனுடன் சேர்ந்த நட்பு குழாம்க ளையோ பார்க்கிற போது தலையை குனிந்து கொண்டு கவனத்தை வேறு பக்கமாய் திசை திரும்பி விடுவான்.அன்றிலிருந்து இன்று வரை அப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறதாய் நினைக்கிறான்.

இப்பொழுதான் என இல்லை, எப்பொழுதும் இப்படித்தான் ,வீட்டில் மூன்று ஜோடிகள்அடர்மற்றும்வெளிர் கலர் பேண்ட்டும் சர்ட்டுமாக வைத்திருக்கிறான்

ஆனாலும் இது நாள் வரை கோயம்புத்தூரில் ட்ரெயினிங்க் சென்ற பொழுது எடுத்தமஞ்சள்கலர்கட்டம்போட்டசட்டைபோல்இதுநாள்வரைஅமையவில்லை.

சட்டை துணியை எடுத்து வந்த கையோடு மேட்டுபட்டு டெய்லரிடம் போய் தான் தைத்தான்,அவரிடம் துணி தைப்பது இவனுக்கு மிகவும் பிடித்தமான தாக.

இப்போதைக்குள்ளாய்சட்டைகள்எடுத்துதைத்ததில்லை.எல்லாம்ரெடிமேட்தான். இவனுக்குத்தெரிந்து சட்டைக்கு துணி எடுத்து தைத்து ரொம்பவும் தான் நாட் களாகிப்போனது,டெய்லர் கூடக்கேட்பார் பேண்ட் தைக்கப்போகும் போது.

“சார் என்ன இது நீங்கள் ரெடிமேடில் சட்டை எடுத்துப்போடுகிறீர்கள் என்பதற் காக சொல்லவில்லை,துணி எடுத்து தைத்துப்போடுங்கள் நன்றாக இருக்கும் உங்களுக்கு,அது உங்களது தோற்றத்தை மேம்படுத்துக்காட்டும், பார்ப்பதற்கு நன்றாக இருப்பீர்கள் என்பார்,ஆனால் இவன் தான் அவர் சொல்வதை கேட்ட தில்லை,காலப்போக்கில்அவரிடம்பேண்ட்தைப்பதையும்நிறுத்திக்கொண்டான்.

அவரிடம் தைக்கிற பேண்ட்டின் துணி கிழிந்த போது கூட அவர் தைக்கிற தையல் பிரியாது அவ்வளவு கெட்டியாய் இருக்கும். என்ன தையல் கூலிதான் கொஞ்சம் அதிகம்/

அதைப்பற்றி இவன் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை.ஆனாலும் அவரிடம் அவர் தைத்த பேண்டையோ சட்டையையோ ஆல்ட்ரேசன் வேலைக்கு என கொண்டு போனால் பண்ணித்தர மாட்டார்,அல்லது அவர் தைத்தது சரிதான் என வாதிடுவார்,அதிலேயே எரிச்சலுற்றுஇவன் அவரிடம் போய் தைப்பதை யே நிறுத்திக்கொண்டான்,

இப்போது மார்க்கெட் அருகில் இருக்கிற கடையில் தைக்கிறான் ,அளவு கொடுத்து அட்வான்ஸ் கொடுத்து விட்டு வந்துவிட்டால் போதும்,மறு நாள் அல்லது அதற்கு மறு நாள் போய் வாங்கிக்கொள்ளலாம் என்கிற சௌகரியத் திற்காக அங்கே போய் கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறான்.

பையன்களுக்குரெடிமேட்தான்,அவர்களுக்கு பிடித்த டிசைனில் பிடித்த கடை யில் எடுத்துக்கொள்வார்கள்.அது போலாய் எடுத்த ஒன்றைத்தான் இப்பொழுது அணிந்து கொண்டு வெளியே வருகிறான்.கிளம்புகிறார்கள் பஜாருக்கு/

வட்ட வடிவ குட்டிக்கடிகாரத்திற்குள்ளாய் அடைந்து கிடந்த முட்களின் நேசம்மிகு பிணைப்பும் கைகூட்டலும் தோள் மீது கைபோட்டுக்கொள்ளலும் நன்றாகவே/

அது நேரம்அறிவித்துச்செல்கிறபொழுதுஇனிய பொழுதெனத்தான் கணக்கில் கொள்ளவேண்டியதாய் இருக்கிறது,

வடக்குபார்த்தசுவரில்இருந்தசெல்பின்மீதுஇருந்ததிண்டைதாண்டிவைக்கப்பட்
டிருந்ததாய் காட்சிபட்ட கடிகாரம் அங்கு வைக்கப்பட்ட நேரம் மிகவும் சுவாரஸ் யம் சுமந்து இருந்ததாய் அறிவான் இவனும் மனைவியும்/

கடிகாரம் வாங்கி வந்த இடம் பஜாராகவும்,வாங்கிய கடை பாய் கடையாகவும் இருந்தது,.பாய் கடை துரைசாமி டாக்டர் ஆஸ்பத்திரி அருகில் இருந்த சந்தில் இருந்தது,அங்குதான் வாங்கினான் கடிகாரத்தை,150ம் ரூபாய் என/

நூற்றி ஐம்ப ரூபாய்க்கு கடிகாரமா,,,.ஆச்சரியம் கலந்து வாங்கி வந்து சுவரில் மாற்றிய தினத்திலிருந்து இன்று வரை ஓடிக்கொண்டும் காலத்தை சரியாக காட்டிக்கொண்டுமாய் இருக்கிறது எனலாம்,

காலத்தை கணக்கிட்டு காட்டுகிற கடிகாரம் தன் நிலைகாட்டி வட்ட வடிவ கடிகாரத்திற்குள் அடைபட்டே கிடக்கிறது சின்னதும் பெரியதுமான முள் ஓட்ட த்துடனும் விநாடி முள்ளை துணைக்குச் சேர்த்துக் கொண்டுமாய்/

வீட்டிலிருந்து கிளம்பி தெரு இறங்கி குடிகள் கடந்து ஸ்டைலாக சைக்கிளை ஸ்டாண்ட்போட்டுநிறுத்தி ஆனந்தா ஹோட்டல் டீயை ஸ்டாரங்காக செல்வம் மாஸ்டர் கைகளால் குடித்துக்கொண்டுமாய் இருக்கிற பொழுது அவர் அணிந் திருக்கிற வெளிர் நிற சட்டையும்,கட்டம் போட்ட கைலியும் எப்பொழுதாவது புகைகிற பீடியின் புகையும் அவரது சப்தமற்ற பேச்சும் மென்சிரிப்பும் அவரை அடையாளம் காட்டும்.

இவனைப் போலானோர்களைப் பார்க்கிற போது குடித்துக்கொண்டிருக்கிற பீடியைஅமத்தி விடுவார், இல்லை டீ பட்டறையின் ஓரமாய் வைத்து விடுவார், ஒரு தடவை அவர் பட்டறையின் ஓரமாய் பீடியை வைத்ததைப் பார்க்காமல் பட்டறையின் ஓரம் உள்ளங்கையின் முனையை ஊன்றி விட்டான் தெரியா மல்/

உடன் சுட்டு விட்ட பீடியை கையில் எடுத்து டீ மாஸ்டரிடம் சொன்ன போது மாஸ்டர் தர்மசங்கடமாய் நெளிந்தார்,

இவன் நினைத்துக்கொண்டான்,செல்வம் மாஸ்டர் போடுகிற டீயின் சூடு குடிக்கும் முன்பாக உள்ளிறங்கி கைவரை வந்து சூடு காட்டிச்செல்கிறது போ லும் என்கிற நினைப்புடன் உள்ளே சமையல் மாஸ்டராய் இருக்கிற முதலா ளிக்கு வணக்கம் சொல்லி விட்டு நகரும் முன்னாய் அவரை முதலாளி என கூப்பிடுவதன் ரகசியம் இவனுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கிறது,

என்ன மொதலாளி என்ன இப்பிடி என்ன சமையலு, என்ன ஸ்பெசலு இன்னை க்கி என்றால்,,,அட என்ன மொதலாளி நீங்க என்னமோ பெரிசா ஆர்டர் பண்ணி சாப்புடப்பொற மாதிரி,என்ன பண்ணுனாலும் ஒங்களுக்கு அந்த சாம்பார் சோறும்ஆம்ளேடுட்டும்தான்புடிச்சிருக்கு,அது போல எனக்கு ஒங்களுக்குன்னு எடுத்துவச்சிதனியா பரிமாருறதுக்குன்னு கொஞ்சம் சிறப்பான சமையல் ஐட்ட ங்கள்உண்டு, அதை கொஞ்சம் எடுத்து வச்சிருவேன், அப்புறமா நீங்க பிரியமா கேக்குற ஆம்ளேட்ட நீங்க வந்து சாப்புட உக்காந்த ஒடனே போட்டுத்தருவேன் ,அதுதான் என்னோட ஸ்பெசல் சமையலும்,அதுல இருக்குற பழக்கமும், இதுல நீங்க போயி என்னைய மொதலாளின்னு கூப்பிட்டீங்கண்ணா எப்பிடி,,,? என்பவரைப் பார்த்து இவன் சொல்வது எனக்காக சாப்பாட்ட எடுத்து வக்கிற இந்த மன விசாலம் இருக்கு பாருங்க, அதுக்காகத் தான் ஒங்கள மொதலா ளின்னு கூப்புட்டேன்,வேறஎதுக்கும் இல்லை என சொல்லிவிட்டு நீளம் காட்டி செல்கிற தார்ச்சாலையில் கன ரகமும் இலகு ரகமும் இரு சக்கர வாகனங் களும் சமயா சமயங்களில் பாதசாரிகளும் செல்கிற சாலையில் இவனும் ஒருவனாக,,,/

சென்று ஓடிய நாட்களைத்தாண்டி இப்பொழுது அந்த ஆனந்தா ஹோட்டல் இல்லாத நாட்களில் செல்வம் மாஸ்டரையும் முதலாளியையும் எங்காவது யாராவது பார்த்தால் சொல்லுங்கள் எனச்சொல்லுவான், தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமுமாய்/

அவ்வப்பொழுதாய் இவன் டீக்குடிக்கின்ற முக்குரோட்டுக் கடையில்இருக்கிற டீமாஸ்டர்செல்வத்தைப்போலவேதென்படுவார்,முதலாளியைஇவன்குடியிரு க்கும் ஏரியாவிலேயே இப்பொழுது பார்க்கமுடிகிறது.

திருச்சிப்பக்கம் விராலி மலையில் போய் ஒரு ஹோட்டலில் வேலைபார்த்த அவர் உடல் நிலை மோசமாகிப்போய் விட்டதால் வந்து விட்டதாகக் கூறி னார்,

ஆறரை மணிக்கு பஜாருக்குச்செல்வது உசிதமற்ற காரியம் என்றும்,அவ்வ ளவாக அது நன்றாக இருக்காது என்றுமாய் சொல்லப்படுகிறதா என்ன,,? அப்ப டியெல்லாம் இல்லை,போகலாம் என்கிற முடிவு தாங்கி நீண்ட வேளைக்குப் பின்னான யோசனைக்கு அப்புறமாய் கிளம்பினோம், நானும் மனைவியுமாக/

ஏங்க அந்த செல்போன ஆப் பண்ணி வச்சிட்டு கொஞ்சம் பாட்டில்ல தண்ணி ய ஊத்துனாத்தான் என்ன,எல்லாம் நானேதான் செய்யனும் நீங்க எதையும் தொட் டுறாதீங்க, அப்புறம் ஏன் லேட்டு எதுக்கு லேட்டுன்னு என்னையப் போட்டு பிடுங்கிஎடுத்தாநான்என்னதான் செய்யிறது சொல்லுங்க,,,,என அவள் சொன்ன நேரம் இவன் செல் போன் பேசிக்கொண்டிருந்தான் ,

மூன்று பேரிடம் பேச வேண்டியிருந்தது,ஒன்று சின்னவனிடம்,

நாங்கள் கிளம்புவற்குசற்று முன்தான் கிளம்பி நண்பனின் வீட்டிற்கு சென்றி ருந்தான்,அவனுக்குஇப்பொழுதுஅடிக்கடிநண்பனின்வீட்டிற்குச்செல்லப் பிடிக்
கிறது.

என்னடாவெனக்கேட்டால்அங்குஅவன்தொலைக்காட்சியில்ஆங்கிலச்சேனல் களை வைத்துப்பார்க்கிறான்.அதில் நல்ல,நல்ல படங்களையெல்லாம் பார்க்க முடிகிறது, அதனால்தான்செல்கிறேன்என்கிறான்/

அடுத்ததாக போன் பண்ண நினைத்த பெரியவன் திருமங்கலம் பக்கமாய் வந்து கொண்டிருக்கிறேன் என்கிறான்.

இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது அடிபட்டு மதுரை ஆஸ்பத்திரியில் இருக்கும் நண்பனைப் பார்க்கப்போயிருந்தான்.

மூன்றாம் நபர் இவன் வேலை பார்க்கும் அலுவலகத்தில் வேலை பார்க்கிற கிருஷ்ணன் நம்பியிடம்,திருநெல்வேலியில் இருக்கிற அவரிடம் அலுவலக வேலை நிமித்தமாக பேச வேண்டியிருந்தது.

எல்லோரிடமும்பேசிவிட்டுதிரும்புகிறபோதுஎடுக்க மறந்த ஹெல் மெட்டை எடுப்பதற்காகவீட்டைதிரும்பவுமாய்திறந்துஹெல்மெட்டைஎடுத்துக்கொண்டு வீட்டைப்பூட்டி விட்டுக்கிளம்புகிற நேரம் மாலை மணி ஆறையாய் இருக்கிற து,

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக,

vimalanperali said...

நன்றியும் அன்பும்!