30 Jul 2017

ஊர் கோலம்,,,,,/



வீதியிலிருக்கிற வீடுகள் எங்குமாய்
ரூபாய் இரண்டும் மூன்றும் ஐந்துமாய்
யாசகம் பெற்றும்,சில வீடுகளில் சாப்பாடு வாங்கியுமாய்
சென்ற சாமியார் வேடம் பூண்டவனுக்கு
வயது முப்பதிற்கு மிகாமலும்
இருபத்தைந்தை எட்டித்தொடுகிற
வயதுமாய்த்தான் இருக்கும்,
சில வீடுகளில் சாப்பாடு போட்டார்கள்,
சில வீடுகளில் அதுவும் அற்று பணம் கொடுத்தார்கள்,
சில வீடுகள் கதவுகளை திறக்கவே மறுத்தன.
பண்ம பெற்றுக்கொண்ட வீடுகளில்
ஆண் மற்றும் பெண்கள் குழந்தைகளின்
கையைப்பிடித்து ஜோஸ்யம் சொல்கிறான்.
சாப்பாடு போட்ட்ட வீடுகளில்
கையெடுத்துக்கும்பிடு போடுகிறான்,
திறக்க மறுக்கிற கதவுகளைக்கொண்ட வீடுகளை
வெறித்துப்பார்த்து ஒரு எளிய புன்னகையுடன் கடக்கிறான்.
இவை எல்லாவற்றையும் ஒரு நேர்கோட்டு நிகழ்வாக
அடி பிறழாமல் செய்துகொண்டிருக்கிற அவன்
எதற்கும் மனம் கோணி விடாமல்
தன் நடை தாங்கி வந்து கொண்டிருக்கிறான்.
வயது தந்த அனுபவம் எனச்சொல்லி
இல்லற வாழ்வு துறந்து சாமியாராகி இருக்க வாய்ப்பில்லை.
இந்த வயதில்/
பின்,,,,,,,,,?என்கிற கேள்வி சுமந்தவனாய்
வருகிறேன் வீட்டிற்குள்ளாய்/

5 comments:

vimalanperali said...

நன்றியும் அன்பும்/

Thulasidharan V Thillaiakathu said...

வயது தந்த அனுபவம் எனச்சொல்லி
இல்லற வாழ்வு துறந்து சாமியாராகி இருக்க வாய்ப்பில்லை.
இந்த வயதில்/
பின்,,,,,,,,,?//

அதானே என்ன காரணமாக இருக்கும்? வறுமை?!!!

துளசிதரன், கீதா

vimalanperali said...

வணக்கம் துளசிதரன் சார்,
நன்றியும் அன்புமாய்,,,,
வறுமைக்கு வேலைவாய்ப்புகள்
பிரதிபலனாக அமையுமே,,/

வெங்கட் நாகராஜ் said...

விடை தெரியாத கேள்வி!

கவிதைக்காய் கொடுத்திருக்கும் படம் நன்று!

vimalanperali said...

வணக்கம் சார்
அன்பும் பிரியமும் சுமந்த
கருத்திற்கு நன்றி/