28 Sept 2011

ஹைக்கூவாய்,,,,,,,


 
 சிறகடித்துக்குளிக்கும் பறவை.
வாகனத்தின் டயர்தடத்தில்
தேங்கிநிற்கும் மழை நீர்/
          #####
சர்க்கஸில் ஆட்டக்காரன்.
மதில் மேல் நடக்கும் ஆடு/
          #####
அலைகள் விரிகின்றன.
பக்கெட்டில் தண்ணீர்/
          #####
தூரத்தில் வெடியோசை.
பூக்கள் பூக்கின்றன/
          #####
பேரோசையுடன் விழும் அருவி.
விலைக்கு வாங்கிய பாட்டிலில்
தண்ணீர் அருந்து சிறுவன்/
          #####
பைக்குள்ளாக புத்தகங்கள்.
மனதிற்குள்ளாக பாடங்கள்/
           #####
மிதந்து செல்லும் தூசி.
சுழித்தோடுகிற தண்ணீர்/
          #####
விரைந்து வருகிற வாகனம்.
மெதுவாய் சாலை கடக்கும் கோழி/
            #####
மேகங்கள் கலைகின்றன.
கூட்டம்,கூட்டமாய் பறக்கும் பறவைகள்/
           #####
காற்றில்  மிதந்து வரும் சிறகு.
கண் அறியா தூரத்தில் இறகுதிர்கும் பறவை/

            #####

No comments: